தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 22

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 22

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 22


PUBLISHED ON : நவ 22, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 22, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திராவிட வெற்றிக் கழகம் கட்சி தலைவர் மல்லை சத்யா அறிக்கை: த.வெ.க., அரசு பொறுப்பு ஏற்றதும், அந்தக் கூட்டணியில் அழையா விருந்தாளியாக சென்று ஒட்டிக் கொண்டவர் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ. ஆடிய காலும், பாடிய வாயும், வாங்கிய கையும் சும்மா இருக்காது என்பர். 'வாங்கியதை விட அதிகமாக கூவுகிறார்' என்ற, நடிகர் வடிவேல் காமெடியை எல்லாம் மிஞ்சும் வகையில், நாள்தோறும் வைகோ பேசிக் கொண்டு இருக்கிறார்.

அது சரி... தி.மு.க.,விடம் வாங்க வேண்டியதை வாங்கிட்டு, நீங்களும் வைகோவுக்கு எதிராக கூவுவதாக சொன்னால் ஏத்துக்குவீங்களா?

பா.ஜ., தமிழக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் பேச்சு: தமிழக கவர்னர், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பேசியதை, ஆட்சி கலைப்பு என்ற கோணத்தில் அணுக வேண்டியதில்லை. தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சி செய்கிறது என்பது பா.ஜ.,வுக்கு முக்கியமல்ல. ஆட்சி, மக்கள் நலனுக்காக நடக்கிறதா என்பதே முக்கியம். காங்கிரஸ் ஆட்சியில், 100 முறைக்கு மேல் மாநில அரசுகள் கலைக்கப்பட்டன; அதில் தி.மு.க., ஆட்சியும் அடங்கும்.

வாஸ்தவம் தான்... மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியில் எந்த மாநில அரசையும் கலைக்கலையே!

தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: பழனிமலை முருகன் சொத்தை பட்டா போட்டது, திருச்செந்துார் சூரசம்ஹார நிகழ்வில், முருகனுக்கு மேலாளராக முதல்வரை முன்னிறுத்தி கோஷமிட்டது, இப்போது திருப்பரங்குன்றம் தீபமேற்றுதலிலும் குழப்பம் விளைவிப்பது என, வேலேந்தும் இறைவனுடனான முருக பகையை, படை வீடுதோறும் தொடர்ந்து வருகிறது, கொள்கையற்ற கோட்டு மாடல் சர்க்கார்.

திருப்பரங்குன்றம் தீபத்துாண் விஷயத்தை, விவகாரமாக்கியதே கடந்த தி.மு.க., அரசு தான் என்பதை பக்தர்கள் யாரும் மறக்கலை!

காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை:
பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் முருகன் தலைமையில், நான்கு எம்.எல்.ஏ.,க்களாக இருந்ததை, தன் மிகச்சிறந்த வழிகாட்டுதலால் ஒரே ஒரு தொகுதியாக சுருக்கியவர், தற்போதைய பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன். கையில் இருக்கும் அந்த ஒரு தொகுதியை கூட தக்கவைக்க முடியாத நிலையில் இருப்பவர், மேடைக்கு மேடை, 'நாட்டில் காங்கிரசை ஒழிப்போம்' என, வெற்றுக் கூச்சல் போடுவது தமிழக அரசியலின் மிகப்பெரிய நகைச்சுவை.
நாடு முழுதும் காங்., மவுசு அதல பாதாளத்துக்குப் போயிடிச்சு... தென் மாநிலங்களில் தான், உசுரோட இருக்கு... இதைத் தக்க வைக்க, கட்சி வளர்ச்சிப் பணியைப் பார்க்கிறதை விட, பா.ஜ.,வின் முதுகை சொறிய வேண்டாமே!


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us