தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 21

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 21

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 21


PUBLISHED ON : நவ 21, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 21, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ., தமிழக செயலர் வினோஜ் செல்வம் பேச்சு: தமிழகத்தில் இருந்து, பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டிருப்பது, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே தடை அமலில் இருந்த காலத்தில் கோவை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டன. இந்த சூழலில் தடையை ரத்து செய்திருப்பது, இன்னும் பல மடங்கு கனிம வளங்களை கடத்துவதற்கான வாய்ப்பாக அமையும்.

எல்லைகளில் உள்ள நம்ம மாநில சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப் படுத்தினாலே, கனிமவள கொள்ளை யை தடுக்க முடியுமே!

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வட தமிழக தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் பேச்சு: 'திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதிக்கக்கூடாது' என, உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க., அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'கந்த சஷ்டி பாட வேண்டும்' என்ற கோரிக்கையுடன் விஸ்வ ஹிந்து பரிஷத் ஒருங்கிணைப்பாளர் ராமன் தனிநபராக நடைபயணம் சென்றதை, செங்கல்பட்டு டி.எஸ்.பி., வீரகுமார் தடுத்து நிறுத்தி, கீழே தள்ளி மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தலில் தி.மு.க., தோல்வி யடைய, இது போன்ற அடாவடி அதிகாரிகளும் காரணம் என்பதை, த.வெ.க., அரசு மறந்துடக்கூடாது!

தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி பேட்டி: மதுரை செக்கானுாரணி போலீஸ் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலகிருஷ்ணன் பிரேத பரிசோதனையில், அவர் தாக்கப்பட்டிருப்பதற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. த.வெ.க., ஆட்சியில், 'லாக்கப்' மரணங்கள் தொடர்கின்றன. மக்களுக்கு போலீஸ் நிலையத்திற்கு வெளியிலும், உள்ளும் பாதுகாப்பில்லை.

'தி.மு.க., ஆட்சியில், திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமாரை போலீசார் அடிச்சே கொன்ற சம்பவம் போலவே இருக்கு'ன்னு சொல்ல வர்றீங்களோ?

தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் பேச்சு:


'தமிழகம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் மேகதாது அணையை கட்டுவேன்' என, கர்நாடக முதல்வர் சிவகுமார் எதன் அடிப்படையில் சொல்கிறார் என்று தெரியவில்லை. தமிழகத்தின் அனுமதி இல்லாமல், எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாது. இது தொடர்பாக, அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட, முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பேசி நேரத்தை வீணடிப்பதை விட, உச்ச நீதிமன்றம் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு தேடுவதே சிறந்த வழியாக இருக்கும்!


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us