PUBLISHED ON : நவ 24, 2026 12:00 AM

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை: மீனவ மக்களுக்காக, தி.மு.க., ஆட்சியில் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை உயர்வு, புதிய மீன்பிடி துறைமுகங்கள், துாண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தற்போதைய த.வெ.க., அரசோ, ஜோதிடரின் பேச்சை கேட்டு, ‘சென்னை பட்டினப்பாக்கத்தில் தான் தலைமை செயலகம் கட்டுவோம்’ என, மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதல்வர் விஜய்க்கு, மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் குறித்து தெரியவில்லை.
மீனவர்களை போராட்டத்துக்கு துாண்டி விட்டதா வழக்குப்பதிவு பண்ணிடப் போறாங்க!
காங்கிரஸ் ஆராய்ச்சி துறை தமிழக செயலர் முஹம்மது இஸ்மாயில் அறிக்கை: காங்கிரஸ் தமிழக செய்திப் பிரிவில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நான், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அடுத்து, தி.மு.க., ஆதரவு, ‘டிவி’ விவாதத்தில் பங்கேற்றேன். அதில், தி.மு.க.,வை நான் விமர்சிக்கவில்லை என்பதற்காக, என் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கட்சி பதவியில் இருந்து என்னை நீக்கலாம். ஆனால், காங்கிரஸ்காரர் என்ற உணர்வில் இருந்து என்னை அகற்ற முடியாது.
தி.மு.க., ஆதரவாளரான செல்வப்பெருந்தகையை சந்திச்சது தான், நீங்க செய்த மாபெரும் தவறு!
இந்திய கம்யூ., கட்சியின் தமிழக செயலர் வீரபாண்டியன் பேட்டி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபத் திருநாளன்று ஒரு முறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்வே கல் துாணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என்ற, ஹிந்து அமைப்புகளின் கோரிக்கையை ஏற்கும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது.
ஹிந்துக்களுக்கு ஆதரவா எந்த தீர்ப்பு வந்தாலும், உங்களுக்கு ஏன் வேப்பங்காயா கசக்கிறது?
தி.மு.க., முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி:
த.வெ.க.,வின் ஆறு மாத ஆட்சியில், தமிழக மக்கள் அனுபவித்துள்ள துயரங்களுக்கு எல்லையே இல்லை. தமிழகத்தில் பல்வேறு ஆட்சிக் காலங்களில் இல்லாத கொடுமை, இந்த ஆட்சியில் நடந்துள்ளது. சினிமா டிக்கெட், லாட்டரி டிக்கெட் விற்றவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களாகி உள்ளதால், தமிழகத்தில் அலங்கோல ஆட்சி தான் நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
- உங்க கட்சியில் இருப்பது போல சாராய ஆலை அதிபர்கள், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லுாரிகளின் அதிபர்கள் எல்லாம் த.வெ.க.,வில் இல்லையே!
