PUBLISHED ON : நவ 30, 2026 12:00 AM

இந்திய கம்யூ., கட்சியின் தமிழக செயலர் வீரபாண்டியன் அறிக்கை: ‘திருமணமான ஆண் அரசு ஊழியர்களுக்கு, 15 நாட்கள் மகப்பேறு கால தந்தையர் விடுப்பு அளிக்கப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் விஜய் அறிவிப்பை நாங்கள் வரவேற் கிறோம்.
இந்த விடுப்பை எடுக்கிறவங்க, குழந்தை பெற்ற மனைவிக்கு உதவியா இருக்கணும்... நண்பர்களுடன், ‘ஜாலி டூர்’ கிளம்பிடக் கூடாது!
பா.ஜ., தமிழக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி: சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவி லில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கவச திறப்பு விழாவின் மூன்றாம் நாளில், சுவாமி தரிசனம் செய்ய வந்த பொதுமக்கள் குடிநீர், மருத்துவம், கழிப்பறை வசதிகள் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இது போன்ற முக்கிய திருவிழாக்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
கோவில் கோவிலாக ஆய்வு செய்யும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தலைநகர் சென்னையில இருக்கிற இந்த கோவில் பக்கம் போகலையோ?
சென்னை வாழ் மூத்த குடிமகன்கள் நலம் பேணும், சமூக செயற்பாட்டாளர் தி.ரா.ஸ்ரீநிவாசன் அறிக்கை: சென்னை புழுதிவாக்கம், சிவபிரகாசம் நகரில் மின்சார சுடுகாட்டின் வெளியே ஹரிச்சந்திரன் சிலை இருப்பதால், அங்கு இறந்தவரின் உடலுக்கு சடங்குகள் செய்யப்படும் போது, அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, ஹரிச்சந் திரன் சிலையை சுடுகாட்டின் உள்ளே வைக்க வேண்டும்.
கோவிலுக்கு எதிரில் ஈ.வெ.ரா., சிலையை வைக்கிறவங்களுக்கு, சுடுகாட்டுக்குள்ள தான் ஹரிச்சந்திரன் சிலையை வைக்கணும்னு தெரியாதா?
உங்களை இப்படி பேச வைத்து, அடுத்து வர்ற ஆறு தொகுதி இடைத்தேர்தலில், கூட்டணி அமைக்க அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் ஆழம் பார்க்குதோ?
தி.மு.க., வர்த்தகர் அணி மாநில செயலர் காசிமுத்து மாணிக்கம் பேட்டி:
தேர்தல் களத்தில் அ.தி.மு.க., – தி.மு.க., ஒன்று சேரணும் என்பது என் கருத்தல்ல. அதேநேரத்தில் அது பாவமும் அல்ல. அ.தி.மு.க., – தி.மு.க., இணைய, மறைந்த ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் முயற்சி செய்யவில்லையா? காங்கிரசும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் மஹாராஷ்டிராவில் கூட்டணி வைக்கவில்லையா? மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசும், காங்கிரசும் கூட்டணி வைக்கவில்லையா? மீண்டும் சொல்கிறேன், தி.மு.க., – அ.தி.மு.க.,வை கூட்டணி வைக்க சொல்லவில்லை. அதேநேரம் வைத்தாலும் பெரிய தவறும் இல்லை.
