தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 20

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 20

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 20

2


PUBLISHED ON : அக் 20, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2026 12:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேட்டி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளில் வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் நடவடிக்கைகளில், தமிழகம் முழுதும் தி.மு.க.,வினர் தான் ஈடுபட்டனர். எனவே, தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முழுக்க முழுக்க தி.மு.க., தான் காரணம் என்பதை நான் பகிரங்கமாக சொல்கிறேன்.

அப்படி பாடுபட்டு 97 லட்சம் வாக்காளர்களை நீக்கியும், தேர்தல்ல அவங்களால ஜெயிக்க முடியலையே!

விருதுநகர் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., செல்வம் பேச்சு: விருதுநகர் நகராட்சி ஒப்பந்தங்களில் எனக்கு, ‘கமிஷன்’ வருவதாக கூறப்பட்டது பொய்யானது. நான் வெற்றி பெற்றதும், சிலர் 25 கோடி ரூபாய் தருவதாக கூறினர். எனக்கு இந்த பதவியை கொடுத்தது முதல்வர் விஜய். எனக்கு 25 கோடி அல்ல; 250 கோடி ரூபாய் கொடுத்தாலும், விஜய் சொல்வதை தான் செய்வேன். ராஜினாமா செய் என்றாலும் செய்வேன்.

உங்களுக்கு 25 கோடி ரூபாய் தர்றதா சொன்னவங்க பெயர்களையும் வெளியிட்டிருக்கலாமே!

தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் அருள்தாஸ் பேட்டி: ‘ஒரு பக்கம் டில்லியில் தேர்தல் கமிஷனுக்கு எதிராக போராடும் ராகுலுக்கு விருந்து வைத்துக் கொண்டே, மறுபக்கம் தமிழகத்தில் தேர்தல் கமிஷனை எதிர்த்து போராடும் இளைஞர்களை முதல்வர் விஜய் கைது செய்து இரட்டை வேடம் போடுகிறார்’ என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார். தேர்தல் கமிஷனை எதிர்த்து நாடே போ ராடி கொண்டிருக்கும் போது, தி.மு.க., – எம்.பி.,க்கள் பங்கேற்காமல் வேடிக்கை பார்த்தனர். எனவே, விஜயை விமர்சிக்க ஸ்டாலினுக்கு தகுதி இல்லை; காலமெல்லாம் இரட்டை வேடம் போடுவது ஸ்டாலின் தான்.

நீங்க கேட்பது நியாயமான கேள்வி தான்... தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய அரசு எதிர்ப்பில், தி.மு.க., அடக்கி வாசிப்பது நல்லாவே தெரியுது!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
தமிழக உயிர் ஆதாரமான நீர் உரிமைகளை பாதுகாக்கும் காவிரி தொழில்நுட்ப குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர் பிரிவின் துணை தலைவர் பதவிக்கு, தகுதியும், அனுபவமும் கொண்ட அதிகாரியை நியமிக்காமல், காலம் தாழ்த்தி வரும் த.வெ.க., அரசின் நிர்வாக அலட்சியம் கண்டனத்திற்குரியது. நீர் விவகாரங்களை கையாளும் அறிவும், அனுபவமும் கொண்ட தகுதியான தலைமை பொறியாளரை, காவிரி தொழில்நுட்ப குழும துணை தலைவராக உடனே நியமிக்க வேண்டும்.
காவிரி போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களை கையாள வேண்டிய அதிகாரி பணியிடத்தை காலியாகவே வச்சிருப்பது, விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பயன் தராது!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us