PUBLISHED ON : அக் 19, 2026 12:00 AM

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான மயிலை வேலு அறிக்கை: மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வாக நான் இருந்தபோது, எம்.எல்.ஏ., நிதியில் துவங்கப்பட்ட திட்ட பணிகளை, தற்போதைய த.வெ.க., – எம்.எல்.ஏ.,வும், உணவுத் துறை அமைச்சருமான வெங்கடரமணன் திறந்து வைத்தார்; அது மகிழ்ச்சி தான். ஆனால், என் பெயருடன் இருந்த பலகை அகற்றப்பட்டுள்ளது. இது நிர்வாக நடவடிக்கையா அல்லது அரசியல் பயணத்தின் வெளிப்பாடா?
எல்லா ஆளுங்கட்சியினரும் செய்றதையே இவங்களும் ஆரம்பிச்சிட்டாங்க என்பது தெளிவா தெரியுது!
காங்.,கைச் சேர்ந்த, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் சிவ.ராஜசேகரன் அறிக்கை: அதிகார திமிரும், எதேச்சதிகார மனநிலையும், ஆணாதிக்க ஆணவமும் கொண்ட தி.மு.க.,வைச் சேர்ந்த சேலம் மேயர் ராமசந்திரன், ‘காங்கிரஸ் துணை மேயர் சாரதா இருக்கையை கீழே இறக்கினால் தான் கூட்டத்தை நடத்துவோம்’ என்றார். சேலம் மாவட்ட காங்., பார்வையாளர் என்ற முறையில், இந்த பிரச்னையில் தனி கவனம் செலுத்தும்படி முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தேன். தற்போது, நகர்ப்புற உள்ளாட்சி துறை உரிய வழிகாட்டுதலையும், தெளிவுரைகளையும் வழங்கி, துணை மேயருக்கு நிகழ்ந்த அநீதி தடுக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், இன்னும் மூணு மாசம் தான் இருக்கு... அப்புறம், தி.மு.க.,வினரின் ஆட்டம் அடங்கிடும்!
பா.ஜ., தமிழக பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேச்சு: ‘விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு காரணம்’ என, காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டியிருப்பது பிரச்னையின் அனைத்து அம்சங்களையும் ஆராயாமல், அரசியல் செய்வதையே காட்டுகிறது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம், போர் பதற்றம், போக்குவரத்து செலவுகள், பருவநிலை மாற்றத்தால் விவசாய உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகள், வர்த்தகர்கள் பதுக்கல், கடத்தல் போன்ற காரணங்கள் தான் அத்தியாவசிய பொருட்களின் விலையை பாதிக்கின்றன.
இதே விலைவாசி குறைஞ் சிருந்தா மட்டும், ‘மோடியின் சிறப்பான பொருளாதார நடவடிக்கை’ன்னு பாராட்டி தள்ளியிருப்பீங்களே!
தி.மு.க., ஆட்சியிலும் ஆம்னி பஸ்கள் கொள்ளை அடிக்க தான் செய்தன... அப்ப, நீங்க என்ன நடவடிக்கை எடுத்தீங்கன்னும் விளக்கியிருக்கலாமே!
தி.மு.க., முதன்மை செயலரும், எம்.எல்.ஏ.,வுமான நேரு அறிக்கை:
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை பயன்படுத்தி, ஆம்னி பஸ்கள், அடிக்கும் பல மடங்கு கட்டண கொள்ளையை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது, த.வெ.க., அரசு. ஆம்னி பஸ்சில், எட்டு மடங்கு கட்டண கொள்ளை நடக்கிறது. அரசு பஸ் கட்டணத்தோடு ஒப்பிட்டால், 12 மடங்கு அதிகம். மக்களின் பண்டிகை மகிழ்ச்சியை விலை பேசுவோருக்கு விஜய் அரசு துணை போகிறதா?
