தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 24

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 24

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 24


PUBLISHED ON : அக் 24, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: துாத்துக்குடி மாவட்டம், ஆத்துாரில் தசரா விரதமிருந்த, 30க்கும் மேற்பட்ட மாணவர்களின் மாலையை கழற்றச் சொல்லி தாக்கிய தலைமை ஆசிரியர் ஒரு புறம்; கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் 10ம் வகுப்பு மாணவியின் கை காப்பை மறைக்கச் சொன்ன தலைமை ஆசிரியை மறுபுறம் என, அடுத்தடுத்த சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. சமத்துவம், நல்லிணக்கம் போதிக்கும் கோவிலாக கல்வி நிலையங்கள் இருக்க வேண்டும்; குறிப்பிட்ட ஒரு மதத்தின் அடையாளங்களை பறிக்கும் கூடங்களாக மாற, அரசு துணை போகக்கூடாது .

தி.மு.க., அரசில் நடந்த இது போன்ற சம்பவங்கள் இப்பவும் தொடர்வது, த.வெ.க., அரசுக்கு நல்ல பெயரை வாங்கி தராது!

சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் பேட்டி : ‘எல் – நினோ’ எனும் தட்பவெப்ப மாறுபாடு காரணமாக, வரும் நாட்களில் சென்னையில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால், சுரங்கப்பாதைகளை ஆய்வு செய்து வருகிறோம். ஒரு முறை தண்ணீர் வடிந்து விட்டது என்பதால், அதை வெற்றியாக பார்க்க முடியாது. அதில் இருக்கும் பாடங்களை மட்டும் கற்றுக்கொள்ள வேண்டும்.

சரியா சொன்னீங்க... இந்த பருவமழை காலத்தை சமாளிக்கிறதுல தான், உங்களது நிர்வாகத் திறமையே அடங்கியிருக்குது!

ம.தி.மு.க.,வின் திருச்சி லோக்சபா தொகுதி எம்.பி., துரை வைகோ பேட்டி: தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுதும் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. இதை தடுக்க, மத்திய – மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும்.

சொந்த கட்சியில் யாரேனும் போதைப்பொருள் விற்று கட்சி நிதி கொடுத்தால், உடனே கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான வழியில் சம்பாதிக்கும் எந்த பணத்தையும் கட்சிக்கு செலவழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

‘கருவாடு விற்ற காசு நாறாது’ன்னு நினைக்கிற அரசியல்வாதிகள், நன்கொடை வருதான்னு தான் பார்ப்பாங்களே தவிர, அது எப்படி வந்துச்சுன்னு எல்லாம் கேட்க மாட்டாங்க!

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி:
போதைப்பொருள் விவகாரத்தில் தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு போனதே தி.மு.க., ஆட்சி தான். ‘மெத் ஆம்பெட்டமைன்’ போதைப்பொருள் ‘நெட்வொர்க்’ தமிழகத்தில் ஊடுருவியதே, கடந்த ஐந்து ஆண்டுகளில் தான். இதை கட்டுப்படுத்துவது தான், முதல்வர் விஜயின் ஒரே குறிக்கோள்.
முன்னாடி எல்லாம் கஞ்சா, அபின்னு தான் போதைப் பொருட்களை சொல்வாங்க... தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு தான், வாயில நுழையாத பெயர்ல எல்லாம் போதைப் பொருட்கள் புழங்க ஆரம்பிச்சது என்பதில் சந்தேகமே இல்லை!


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us