தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை!

பேச்சு, பேட்டி, அறிக்கை!

பேச்சு, பேட்டி, அறிக்கை!


PUBLISHED ON : அக் 25, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி அறிக்கை: செஞ்சி அருகே, 7 வயது சிறுமி காணாமல் போய் பல நாட்கள் ஆகின்றன. ராணிப்பேட்டையில்கூட இதேபோல ஒரு குழந்தை காணாமல் போய், ஒரு மாதமாகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த, 'டம்மி' ஆட்சியில், பச்சை குழந்தைகளுக்குகூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழகம் இருக்கிறது.

எல்லா ஆட்சியிலும் யாராவது காணாமல் போயிட்டு தான் இருக்காங்க... உங்க ஆட்சியில், இப்படிப்பட்ட சம்பவங்களே நடக்காத மாதிரி பேசுறீங்களே!

காங்கிரசின் மகளிர் பிரிவு தர்மபுரி மாவட்ட தலைவர் ரோஜா அறிக்கை: காங்கிரசின் மகளி ர் பிரிவு தமிழக முன்னாள் தலைவர் ஹசீனா சையது, என்னை மாவட்ட தலைவராக நியமித்தார். எனக்கு கீழ், 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உள்ளனர். கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறேன். நான் பதவியில் இருக்கும் போதே, இன்னொருவரை மாவட்ட தலைவராக நியமிப்பது சரியா; காங்கிரஸ் மகளிர் பிரிவு தமிழக பொறுப்பு தலைவர் ராமலட்சுமி செயல் நியாய மா?

ஹசீனா சையது பதவிக்காலம் முடிஞ்சிட்டதால, அவங்களால நியமிக்கப்பட்டவங்க பதவிக் காலமும் முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சுட்டாங்களோ?

அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,யும், பா.ஜ., தமிழக துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா அறிக்கை: முதல்வர் விஜய் ரசிகர்களின் அத்தனை சூழ்ச்சிகளையும், பொய் பிரசாரங்களையும் மீறி, ஜெயிலர் - 2 பெற்றிருக்கும் அமோக வெற்றி, வஞ்சகங்களையும், சூழ்ச்சிகளையும் மட்டும் கொண்டு செயல்படும் விஜய் ரசிகர்களுக்கு விழுந்திருக்கும் சம்மட்டி அடி. இதிலிருந்து தெரிவது என்னவென்றால், மோடி அரசியல் சூப்பர் ஸ்டார்; ரஜினி சினிமா சூப்பர் ஸ்டார். ரஜினியிடம் தோல்வி அடைந்த விஜய், இனி தமிழக அரசியலிலும் வீழ்த்தப்படுவார்.

ரஜினிக்கு இப்ப 75 வயசாகுது... இனிமே அவரை அரசியலுக்கு இழுத்து வந்து, விஜயை வீழ்த்த முடியும்னு நினைக்கிறீங்களா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us