sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

1


PUBLISHED ON : மே 31, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 31, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:

மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், முருகன், ஜெய்சங்கர் போன்ற தமிழர்கள், வேறு மாநிலங்களில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு, பார்லிமென்டில் கலக்கி கொண்டிருக்கின்றனர். பா.ஜ., திறமையானவர்களை தேடி பிடித்து, ராஜ்யசபா எம்.பி., யாக்குகிறது. தமிழகத்தில் தி.மு.க.,வை எதிர்த்து கட்சி துவக்கியவர்கள், ஒற்றை ராஜ்யசபா சீட்டுக்காக, கட்சியை அடகு வைப்பது முதல் முறையல்ல. அன்று வைகோ; இன்று கமல்.

வைகோ, கமல் கட்சியின் பலத்துக்கு ஒரு ராஜ்யசபா சீட் என்பதே அதிகம் தான்!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் அறிக்கை:

நாட்டையே உலுக்கிய, சென்னை, அண்ணா பல்கலைமாணவி பாலியல் பலாத்கார வழக்கில், நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. ஆனாலும், இன்னும் பதில் கிடைக்காத சில கேள்விகள் உள்ளன. அந்த வழக்கின் மூல கேள்வியான, 'யார் அந்த சார்?' என்பது அப்படியே இருக்கிறது. காட்சிகள் மாறும். விரைவில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முதல்வராக வருவார். அப்போது, அந்த சார் யாராக இருந்தாலும், கூண்டில் ஏற்றப்படுவார்.

இவர் இப்படி சபதம் போட்டால், கோடநாடு எஸ்டேட்டில் நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கிலும் தி.மு.க., அரசு வேகம் காட்ட துவங்கிடும்!

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேச்சு:

'இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான். நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் மதுவை ஒழிப்பதற்கான முதல் கையெழுத்தை போடுவோம்' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறினார். அதை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் போதை கலாசாரம் அதிகரித்து வருகிறது. விஜயகாந்த் மட்டும் ஆட்சியில் அமர்ந்திருந்தால், மது ஒழிப்பை நிச்சயம் நிறைவேற்றி இருப்பார்.

பரவாயில்லை... 2026 சட்டசபை தேர்தலில் இவங்க தனித்து நின்று முதல்வராகி, விஜயகாந்த் கனவை நனவாக்கலாமே!

அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய மருது அழகுராஜ் அறிக்கை:

'எங்கள் கூட்டணிக்கு விஜய் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். 'தி.மு.க.,வை வீழ்த்த, விஜய் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இவர்கள் கூட்டணி எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதற்கு, விஜய் மீதான இவர்களின் ஒருதலை காதலே உலகறிந்த சாட்சியாகும்.

காதலுக்கு மரியாதை படத்தில் நடித்த விஜய், இவங்களது ஒருதலை காதலுக்கும் மரியாதை தருவாரா?






      Dinamalar
      Follow us