தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மத்திய அமைச்சர் பதவி துாண்டிலில் ம.தி.மு.க., சிக்குமா?

 மத்திய அமைச்சர் பதவி துாண்டிலில் ம.தி.மு.க., சிக்குமா?

 மத்திய அமைச்சர் பதவி துாண்டிலில் ம.தி.மு.க., சிக்குமா?


PUBLISHED ON : மார் 08, 2026 01:42 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2026 01:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

து ண்டால் பெஞ்சை தட்டியபடியே, ''தளி தொகுதிக்கு கடும் போட்டி நடக்கு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த கட்சியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டசபை தொகுதியை, 2021 சட்டசபை தேர்தல்ல, அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.,வுக்கு ஒதுக்குனாவ... அங்க, அந்த கட்சியின் மருத்துவ அணி நிர்வாகி நாகேஷ் குமார் போட்டியிட்டு, தோத்து போயிட்டாரு வே...

''இந்த முறையும், தளி தொகுதியை பா.ஜ.,வுக்கு தான் ஒதுக்க போறாவ... நாகேஷ் குமார் மறுபடியும் போட்டியிட தயாரா இருக்காரு... ஆனா, இந்த தொகுதியில் ரெட்டி சமுதாயத்தினர் அதிகம் இருக்கிறதால, தமிழக பா.ஜ., செயலர் அமர்பிரசாத் ரெட்டியும் இங்க களமிறங்க விரும்புதாரு வே...

''இவர், தனக்கு தெரிஞ்ச டில்லி மேலிட தலைவர்கள் மூலமா காய் நகர்த்திட்டு இருக்காரு... இதனால, அதிர்ச்சியில் இருக்கிற நாகேஷ் குமார், மாநில நிர்வாகிகள் மூலமா, தனக்கு சீட்டை உறுதி பண்ண போராடிட்டு இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''தொடர்ந்து, நாலு வருஷமா பெஞ்ச் தேய்ச்சுண்டு இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றிய அலுவலகத்தில், 2022ல் பொறுப்புக்கு வந்த ஒரு அதிகாரி, மாவட்ட அமைச்சரின் நெருங்கிய ஆதரவாளரா இருக்கார்... ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகள்ல, கடந்த ஆறு மாசங்களா, கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவறது ஓய்...

''குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் எல்லாம் செயல்படாம முடங்கி கிடக்கறது... பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டம் நடத்தியும், அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கல ஓய்...

''தண்ணீர் பிரச்னை யை தீர்க்க, ஊராட்சி செயலர்கள் பணம் செலவு பண்ணிட்டு, திருப்பி கேட்டாலும் அதை வழங்காம அதிகாரி இழுத்தடிக்கறார்... அமைச்சரின் உறவினர்னு சொல்லிண்டு இவர் வலம் வர்றதால, அதிகாரியை தட்டி கேட்க எல்லாரும் பயப்படறா ஓய்...

''சமீபத்தில், மாவட்டத்துல நிறைய யூனியன்கள்ல அதிகாரிகளை இடமாற்றம் செஞ்சா... ஆனா, அமைச்சர் தயவால இவருக்கு மட்டும் இடமாறுதல் போடல ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''வாங்க ஜெயானந்த், ராஜகண்ணப்பன் இப்பதான் கிளம்பினாரு...'' என, நண்பரை வரவேற்ற அன்வர்பாயே, ''மத்திய அமைச்சர் பதவி ஆசை காட்டியிருக்காங்க பா...'' என்றார்.

''யாருக்கு வே...'' என கேட்டார், அண்ணாச்சி.

''தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு தொகுதிகள் குறைச்சு தர்றதா சொல்றதாலும், ராஜ்யசபா எம்.பி., பதவி தர மறுத்துட்ட தாலும், அந்த கட்சி நிர்வாகிகள் விரக்தியில் இருக்காங்க... ஆனாலும், 'தி.மு.க., கூட்டணியில் தான் நீடிக்கணும்'னு அவங்களிடம் வைகோ சொல்லிட்டு இருக்காரு பா...

''அதே நேரம், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வந்தா, வைகோ மகன் துரைக்கு மத்திய இணை அமைச்சர் பதவி தர டில்லி மேலிடம் தயாரா இருக்காம்... இது பத்தி, ம.தி.மு.க.,விடம் திரைமறைவில், பா.ஜ., தரப்புல ரகசிய பேச்சும் நடந்திருக்குது பா...

''இந்த சூழல்ல, வைகோவின் அக்கா மகன் கார்த்திகேயன், சமீபத்துல பா.ஜ.,வுல சேர்ந்திருக்கார்... 'இவரை பின்பற்றி, பா.ஜ., கூட்டணிக்கு வைகோவும் போவாரா'ன்னு அந்த கட்சியினர் பரபரப்பா பேசிட்டு இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us