sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஜூலை 19, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 19, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான பொன்முடி பேட்டி:

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முதலில் பா.ஜ.,வோடு சேர மாட்டேன் என கூறிவிட்டு தற்போது சேர்ந்துள்ளார். அவர் சொந்த பயத்தில் தான் அக்கட்சியில் சேர்ந்து உள்ளார். தி.மு.க.,வுக்கு அது போன்ற பயமில்லை. 'மகளிர் உரிமைத் தொகை, தி.மு.க.,வில் இருந்து வழங்குகின்றனரா?' என, பழனிசாமி கேட்கிறார். அ.தி.மு.க., ஆட்சியில் பல திட்டங்களை கட்சியில் இருந்தா செய்தனர்? அரசு திட்டங்களை அரசு நிதியில் தான் செய்வர்.

அரசு நிதியில் திட்டங்களை கொடுத்துட்டு, பலனை கட்சிக்கு அறுவடை பண்ணுவது தானே ராஜதந்திரம்!

தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி: 'ஓரணியில் தமிழகம்' திட்டம் தி.மு.க.,வுக்கு உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம் தானே தவிர, போலி உறுப்பினர் சேர்க்கும் திட்டமல்ல. அ.தி.மு.க.,வின் உறுப்பினர் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருவதால், பரிதாபத்திற்குரிய பழனிசாமி, எங்கள் திட்டத்தை விமர்சித்துள்ளார். மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பதை பழனிசாமியால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. தேர்தலுக்காக, எதை வேண்டுமானாலும் சொல்வார்; செய்ய மாட்டார். நாங்கள் சொல்வோம்; செய்வோம்.

அப்படியா... 2021 சட்டசபை தேர்தல்ல சொன்ன எல்லாத்தையும் செய்துட்டீங்களா என்ன?

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி: தி.மு.க., 'ஓரணியில் திரள்வோம்; ஓரணியில் சேர்வோம்' என்று கூறுவது எதற்கு? தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. தகுதியுள்ள பெண்களுக்கு, 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை தருவதாக கூறுகின்றனர். எந்த அர்த்தத்தில் தகுதியுள்ள பெண்கள் என்கின்றனர்?

'தி.மு.க.,வுக்கு ஓட்டு போடு வோம்'னு சொல்றது தான் தகுதின்னுநிர்ணயம் செஞ்சிருக்காங்கன்னு தோணுது. ஆனா, உரிமைத் தொகை வாங்குற எல்லாருமே, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்ருவாங்களா என்ன?

முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., வுமான செந்தில் பாலாஜி பேச்சு: 'ஓரணியில் தமிழகம்' பணியில், ஒரு வீட்டில் ஒரு மொபைல் போன் எண் மட்டும் பெற்று ஓ.டி.பி., பெறக்கூடாது. அனைத்து குடும்ப உறுப்பினர்களிடமும் மொபைல் போன் எண் வாங்க வேண்டும். குறைந்தபட்சம் 2 அல்லது 3 எண்கள் கட்டாயம் பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அது கணக்கில் எடுக்கப்படாது. கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்தால் மட்டுமே இணைக்க வேண்டும்.

அது சரி... தேர்தல் சமயத்துல, ஒரு முறை போன் அடிச்சு எடுக்கலைன்னா, அடுத்த நம்பர்ல துரத்தி பிடிச்சு, 'பட்டுவாடா' பண்ண, ஏதுவா இப்பவே எல்லா நம்பர்களையும் சேகரிக்கிறாங்களோ?






      Dinamalar
      Follow us