PUBLISHED ON : ஆக 14, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: அரசு பள்ளிகளில்
படித்த மாணவ - மாணவியருக்கு , மருத்துவ படிப்புகளில், 7.5 சதவீதம்
இடஒதுக்கீட்டை, முன்னாள் முதல்வர் பழனிசாமி கொண்டு வந்ததன் விளைவாக, அரசு
பள்ளிகளில் சேர்க்கை விகிதம் அதிகரித்து வந்தது. ஆனால், தற்போது அரசு
பள்ளிகளில் இருந்து, 1.65 லட்சம் மாணவ - மாணவியர் விலகி, தனியார்
பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக வரும் செய்தி, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் படாததும், தலைமை ஆசிரியர் பணியிடங்கள்
காலியாக இருப்பதுமே இதற்கு காரணம். இதில், பள்ளிக்கல்வி துறை கவனம் செ
லுத்த வேண்டும். இப்பவும், 7.5 சதவீதம் இடஒதுக்கீடு இருக்கே...
அப்படியிருந்தும் மாணவர்கள், அரசு பள்ளியை விட்டு ஓட்டம் பிடிப்பது
கேள்விக்குரியதுதான்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலை வர் கமல்ஹாசன் அறிக்கை: வசதி படைத்தவர்களுக்கு கிடைப்பதை விட, எளிய பின்புலத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக் க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும், மாறி வரும் உலகின் புதிய சவால்களை எதிர்கொள்ள தேவையான திறன்களுடனும் நம் மாணவர்களை உருவாக்க வேண்டும். இந்த தொலைநோக்கு பார்வை யுடன், தமிழக அரசின் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அப்பாடா... ராஜ்யசபா எம்.பி., பதவி அளித்த தி.மு.க.,வுக்கு நன்றிக்கடனை தீர்த்தாச்சு!
தமிழக காங்., - எஸ்.சி., அணியின் தலைவர் ரஞ்சன்குமார் பேட்டி: அரு ணாச்சல பிரதேச மாநிலத்தின் அஞ்சாவ் மாவட்டத்தின் கபாபு பகுதி வரை, சீன ராணுவம் ஊடுருவி இருப்பதாக சொன்னவர், பா.ஜ.,வின் மூ த்த தலைவர் சுப்பிரமணியசா மி. அந்த ஊடுருவலை மத்திய அரசு தடுக்காதது ஏன்?
சுப்பிரமணியசாமி சொல்றதை எல்லாம், இவரது தலைவர் ராகுலே சீரியசா எடுத்துக்க மாட்டாரு... இவர் இப்படி பொங்குறாரே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, அரசுக்கு பரிந்துரைக்க அமைக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமை யிலான குழு, வரும், 18 முதல் செப்டம்பர், 9 வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர் களிடம் கருத்து கேட்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பல மாதங்களாக உறங்கி கொண்டு இருந்த குழு, இப்போதாவது விழித்துக் கொண்டு பணியை துவங்குவது மனநிறைவளிக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை பா.ம.க., தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் இது, பா.ம.க.,வுக்கு கிடைத்த வெற்றி.
அது சரி... உங்க தலைமையிலான பா.ம.க.,வுக்கா, உங்க தந்தை தலைமையிலான பா.ம.க.,வுக்கா?