sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

2


PUBLISHED ON : செப் 11, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 11, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தேர்தல் பிரசார கூட்டங்களில் அனைத்து மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை பேசாமல், குறுகிய கண்ணோட்டத்துடன் பேசுவது அவசியமற்றது. அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள ஓட்டை, உடைசல்களை சரிசெய்வதை விட்டுவிட்டு, வேறொன்றில் கால் வைக்க முயன்றால் பழனிசாமியின் அரசியல் வாழ்விற்கு, 'உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா...' என்ற சூழல் ஏற்பட்டு விடும். பழனிசாமி, இப்படி எல்லா கட்சிகளையும் பகைச்சுக்கிட்டு, தேர்தலில் யாருடன் கூட்டணி சேர போறார்னு தெரியலையே!

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டமே, தி.மு.க., அரசின் கண்துடைப்பு நாடகம். இதுவரை பல லட்சக்கணக்கான மகளிர், உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் கொடுத்திருக்கின்றனர். இப்படி கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களில், இதுவரை, 5 சதவீத மனுக்களின் கோரிக்கையை கூட தி.மு.க., அரசு நிறைவேற்றியிருக்காது.

இப்பவே எல்லாத்தையும் கொடுத்துட்டா, தேர்தலின் போது வாக்காளர்கள் மறந்துடுவாங்களே... தேர்தலுக்கு ஒரு மாதம் முன்னாடி கொத்து கொத்தாக கோரிக்கைகளை நிறைவேற்றுவாங்க பாருங்க!

பா.ம.க., அன்புமணி அணியின் பொருளாளர் திலகபாமா பேட்டி: 'துாய்மை பணியாளர்கள் விவகாரத்தில், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அன்புமணி கேட்பாரா' என, திருமாவளவன் கேட்டுள்ளார். தி.மு.க., அரசுக்கு திருமாவளவன் ஜால்ரா அடிக்க வேண்டாம். பா.ம.க., என்றும் ஒன்றாகத் தான் உள்ளது. பிரச்னைக்கு ஒரு சிலர் காரணமாக உள்ளனர். எங்களுக்கு, என்றும் மக்கள் பிரச்னைகள் தான் முக்கியம்.

பா.ம.க., பிரச்னைக்கு காரணமாக இருக்கும் ஒரு சிலரில், அன்புமணியும் உண்டுதானே!

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலர் கற்பகம் பேட்டி: இன்றைக்கு, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. அதை தடுக்க, சட்டங்களை கடுமையாக்க வேண்டும். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள், ஜாதி ஆணவ கொலைகளுக்கு உள்ளாகின்றனர். ஜாதி ஆணவ கொலைகளை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கு தனி சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும்.

ச ட்டத்தால் எல்லாம் இந்த கொடுமைகளை நிறுத்த முடியாது... மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத் தினால் தான், ஆணவ கொலை களை அறவே ஒழிக்க முடியும்!






      Dinamalar
      Follow us