PUBLISHED ON : செப் 19, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., பிரமுகரான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை:
காங்கிரஸ் கட்சியில் இளைஞரணி, 1960ம் ஆண்டில் இ ருந்தது. குலாம்நபி ஆசாத்,
அம்பிகா சோனி, சிதம்பரம், தங்கபாலு போன்றவர்கள் அதில் இருந்தனர். பா.ஜ.,
கட்சி ஜன சங்கமாக இருந்த காலத்திலும் இளைஞரணி இருந்தது. கம்யூனிஸ்ட்
கட்சிகளிலும் இளைஞரணி அமைப்பு இருந்தது. கடந்த, 1984ல் தான் தி.மு.க.,
இளைஞரணி துவங்கப்பட்டது. ஆனால், 'நாட்டில் உள்ள அர சியல் கட்சிகளில் முதல்
முறையாக இளைஞரணி உருவாக்கப்பட்டது தி.மு.க.,வில் தான்' என, துணை முதல்வர்
உதயநிதி வரலாற்றை திரித்து பேசியுள்ளார். 'தந்தைக்கு பின் தனயன் மாநில
செயலராக இருப்பது தி.மு.க., இளைஞர் அணியில் மட்டுமே' என்பதை தான் உதயநிதி
மாத்தி பேசிட்டாரோ?
முன்னாள் முதல்வர் ஜெ.,யின் தோழி சசிகலா பேட்டி: அ.தி.மு.க.,வை இணைக்க, 2021 சட்டசபை, 2024 லோக்சபா தேர்தல்களில் முயற்சித்தோம் . வரும் 2026 சட்டசபை தேர்தல், மற்றவர்கள் நினைப்பது போல இருக்காது. சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., வில் மாற்றம் நிச்சயம் ஏற்படும்; அ.தி.மு.க., கண்டிப்பாக இணையும். அ.தி.மு.க., ஒன்றிணைய பா.ஜ., தயவு தேவைப்படவில்லை.
அடுத்து, 2029 லோக்சபா தேர்தலின் போதும், இதே 'டயலாக்'கை இவங்க சொல்வாங்க என்பது உறுதி!
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., பேச்சு: தமிழ் மொழி பழங்காலம் தொட்டு, இன்று வரை மக்கள் பயன்பாட்டில் உள்ள தொன்மையான மொழி . ஆனால், சமஸ்கிருதம் தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழி. எனினும், சமஸ்கிருதத்துக்கு மத்திய அரசு அதிகளவில் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் தேவநாகரி, ஹிந்தி போன்ற மொழிகளை அந்த மக்கள் ஏற்றுக் கொண்டதன் விளைவு, அந்த மாநில மொழியான மராத்தி தற்போது முக்கியத்து வத்தை இழந்து வருகிறது. தமிழகத்தில் அது போன்ற நிலை இல்லை.
தமிழுக்கு ஆபத்தில்லை எனும் போது, சமஸ்கிருதத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது பற்றி எதுக்கு கவலைப்படணும்?
தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை: நிரந்தர ஆசிரியர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்பணம், 10,000 ரூபாய் என்பது, 20,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தில் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. தீபாவளி பண்டிகை செலவுக்கு கடன் வாங்கி, வட்டி கட்டி கஷ் டப்படுவதை தவிர்க்க, பண்டிகை முன்பணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.
தேர்தல் வருவதால், கண்டிப்பா இவங்களு க்கும் தீபாவளி பரிசு தருவாங்க என்பது உறுதி!