sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : அக் 11, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 11, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: சென்னையில், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் கைதான தஷ்வந்திற்கு வழங்கப்பட்ட துாக்கு தண்டனையை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. போலீசார் வைத்த ஆதாரங்கள் சரியில்லை. கேமராவில் பதிவான முகம் தஷ்வந்தினுடையது என காவல் துறையால் அடையாளம் காட்ட முடியவில்லை. இதன்மூலம், முதல்வரின் கீழ் உள்ள காவல் துறை குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்க, ஆதாரங்களை வலுவாக சமர்ப்பிக்காமல், தப்பிக்க வை க்கும் நோக்கோடு செயல்பட்டது தெரிகிறது. ஊரறிந்த கொடூர கொலை வழக்கில், குற்றவாளி விடுவிக்கப்பட்டதில், போலீசாரின் அலட்சியத்தை மன்னிக்கவே முடியாது!

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் சென்ற கார், இருசக்கர வாகனம் மீது மோதிய நிலையில், அதில் சென்ற வழக்கறிஞரை, வி.சி., கட்சியினர் கடுமையாக தாக்கி உள்ளனர். இதை வாகனத்தில் அமர்ந்து திருமாவளவன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளார். அவருக்கு தலைமை பண்பு உள்ளதா என்பதே என் கேள்வி.

தலைமை பண்பு இருப்பதால் தான், அவரே களத்தில் இறங்கி அடிக்காமல், அடிப்பொடிகளை ஏவி விட்டிருக்காரு!

தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேச்சு: டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், அப்பாண்டே ராஜ் என்ற மாணவர் மீது வலதுசாரி அமைப்பினர் நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. கல்வி வளாகத்தை வன்முறைக் களமாக மாற்ற முயலும் இத்தாக்குதல், கல்வி சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றுக்கு எதிரானது. குற்றவாளிகள் உடனே கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

அது இருக்கட்டும்... இங்க, நம்ம ஊர்ல, திருமாவளவன் கார் மீது தெரியாம மோதியவரை, வி.சி., கட்சியினர், 'வெளுத்து' கட்டியிருக்காங்களே... அதை எல்லாம் இவங்க கண்டிக்க மாட்டாங்களா?

மா.கம்யூ., கட்சியின் முன்னாள் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசும் முயற்சி நடந்திருப்பது நாட்டுக்கே பேரவமானம். சனாதனத்தை காப்பாற்றுவதாக முழக்கமிட்ட ஒருவர் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார். அவர், வழக்கறிஞர் என்பதும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள டில்லி போலீஸ் துறை மூன்று மணி நேர விசாரணைக்கு பின், அவரை விடுவித்தது என்ற செய்தியும் அதிர்ச்சி தருகிறது.

அந்த நபரை, தலைமை நீதிபதியே மன்னிச்சுட்டாரு... ஆனாலும், இவர் ஏன் விடாப்பிடியா பிடிச்சுட்டு தொங்குறாரு?






      Dinamalar
      Follow us