PUBLISHED ON : நவ 26, 2025 12:00 AM

தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:
ஒரு கட்சித் தலைவர், 'பஞ்ச் டயலாக்' பேசி அலைகிறார். இன்னொரு கட்சித் தலைவர் பஞ்சாங்கத்தை துாக்கி கொண்டு திரிகிறார்.அறிவார்ந்த தமிழக மக்கள், யதார்த்தம் புரியாத இவர்களை, 'ஏப்ரல் பூல்' ஆக்க போகின்றனர்.இவர், த.வெ.க., தலைவர் விஜய், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை தான் சொல்றார் என்பது நல்லாவே தெரியுது... அதேநேரம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாம, வாக்காளர்களை, 'ஏப்ரல் பூல்' ஆக்கிய இவங்க கட்சிக்கு, தேர்தலில் என்ன பரிசு கிடைக்கும்னு தெரியலையே!
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று, 'இயற்கை விவசாயம், நம் பாரம்பரியத்தில் பிறந்தது. அதற்கு தலைமை என்றால், அது தமிழகம் தான்' என்றார். 'இம்மாநாடு அரசியல் கலப்பின்றி இருக்க வேண்டும்' எனவும் பிரதமர் மோடி விரும்பினார். அவரது விருப்பத்தின்படி, விவசாய அணி நிர்வாகிகளின் கடும் உழைப்பால், இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினோம்.
மற்ற கட்சிகள் இந்த மாதிரி மாநாடு நடத்தியிருந்தால், அதில் தங்களது கட்சி முத்திரையை குத்தி, ஓட்டு வங்கி அரசியல் பண்ணியிருப்பாங்களே!
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., பேட்டி: 'உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது' என, என் தந்தை கருணாநிதியிடம் கேட்ட போது, அவர், 'கவர்னர் வேலை பார்ப்பது' என, பதிலளித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தன் மக்களுக்கான உரிமைகளை காக்கவும், மாநில நலன்களை பாதுகாக்கவும் சட்டசபையில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு, டில்லிக்கு அனுப்பும் எளிய பணியை மட்டுமே, கவர்னருக்கு அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதே தி.மு.க., எதிர்க்கட்சியா இருக்கிறப்ப, ஆளுங்கட்சி மீதான புகார் பட்டியலுடன், அதிகாரம் இல்லாத கவர்னரை தேடி போய் கொடுத்தது ஏன்?
மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: இந்திய தொழிலாளிகள் வர்க்கம், 150 ஆண்டு காலம் போராடி பெற்ற ஊதிய பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்புகளை உள்ளடக்கிய 29 சட்டங்களை, நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளாக மாற்றி, பார்லிமென்டில் நிறைவேற்றியதை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் .
தி.மு.க.,விடம், 2019 லோக்சபா தேர்தல் செலவுக்கு, 15 கோடி ரூபாய் வாங்கியப்பவே, இவங்களது, 'தொழிலாளிகளின் தோழன்' சாயம் வெளுத்து போயிடுச்சே!
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று, 'இயற்கை விவசாயம், நம் பாரம்பரியத்தில் பிறந்தது. அதற்கு தலைமை என்றால், அது தமிழகம் தான்' என்றார். 'இம்மாநாடு அரசியல் கலப்பின்றி இருக்க வேண்டும்' எனவும் பிரதமர் மோடி விரும்பினார். அவரது விருப்பத்தின்படி, விவசாய அணி நிர்வாகிகளின் கடும் உழைப்பால், இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினோம்.
மற்ற கட்சிகள் இந்த மாதிரி மாநாடு நடத்தியிருந்தால், அதில் தங்களது கட்சி முத்திரையை குத்தி, ஓட்டு வங்கி அரசியல் பண்ணியிருப்பாங்களே!
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., பேட்டி: 'உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது' என, என் தந்தை கருணாநிதியிடம் கேட்ட போது, அவர், 'கவர்னர் வேலை பார்ப்பது' என, பதிலளித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தன் மக்களுக்கான உரிமைகளை காக்கவும், மாநில நலன்களை பாதுகாக்கவும் சட்டசபையில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு, டில்லிக்கு அனுப்பும் எளிய பணியை மட்டுமே கவர்னருக்கு அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதே தி.மு.க., எதிர்க்கட்சியா இருக்கிறப்ப, ஆளுங்கட்சி மீதான புகார் பட்டியலுடன், அதிகாரம் இல்லாத கவர்னரை தேடி போய் கொடுத்தது ஏன்?
மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: இந்திய
தொழிலாளிகள் வர்க்கம், 150 ஆண்டு காலம் போராடி பெற்ற ஊதிய பாதுகாப்பு, வேலை
பாதுகாப்பு, சமூக பாதுகாப்புகளை உள்ளடக்கிய 29 சட்டங்களை, நான்கு
தொழிலாளர் சட்ட தொகுப்புகளாக மாற்றி, பார்லிமென்டில் நிறைவேற்றியதை மத்திய
அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.
தி.மு.க.,விடம், 2019 லோக்சபா
தேர்தல் செலவுக்கு, 15 கோடி ரூபாய் வாங்கியப்பவே, இவங்களது, 'தொழிலாளிகளின்
தோழன்' சாயம் வெளுத்து போயிடுச்சே!