sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 16, 2026 ,தை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

3


PUBLISHED ON : ஜன 13, 2026 04:07 AM

Google News

PUBLISHED ON : ஜன 13, 2026 04:07 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் வீரபாண்டியன் அறிக்கை:

ஒரே காலகட்டத்தில் பணியில் இணைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஒரே மாதிரியான ஊதியம் கோரி போராடும் ஆசிரியர் சங்க தலைவர்களை தமிழக அரசு அழைத்து பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். போராடும், 1,400 ஆசிரியர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்.

'வெறும், 1,400 ஆசிரியர்கள் தான்னு அலட்சியமா இருந்துட்டா, அவங்க மற்றும் அவங்க குடும்பத்தினர் ஓட்டுகளை மொத்தமா இழக்க வேண்டியிருக்கும்'னு பயப்படுறாரோ?

திருநெல்வேலி தொகுதி காங்., -- எம்.பி., ராபர்ட் புரூஸ் பேட்டி:

தமிழகத்தை பொறுத்தவரை, 1 சதவீதம், 2 சதவீதம் என, ஓட்டு வங்கி வைத்துள்ள கட்சிகள் கூட முதல்வராக வேண்டும் என, ஆசைப்படுகின்றன. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை எல்லா அரசியல் கட்சிகளும் முன்வைப்பது வழக்கம் தான்; அந்த ஆசை காங்கிரசுக்கும் உள்ளது. தொண்டர்களின் கோரிக்கையை மாநில தலைமையிடம் வலியுறுத்துவோம். மாநில தலைமையின் கருத்தை, அகில இந்திய தலைமைக்கு தெரியப்படுத்துவோம். தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

'ஆட்சியில் பங்கு' என்ற இவங்க கோரிக்கை, 2006ல் இருந்தே இருக்கு... 20 வருஷங்களா, அதற்கு மேலிடம் செவி சாய்த்த மாதிரியே தெரியலையே!

விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழகத்தின் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் பேச்சு:



'கோவில் கூடாது என்பது நம் நோக்கமல்ல; அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது' என பேசித்தான், தி.மு.க.,வினர் ஆட்சிக்கு வந்தனர். இன்று கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக மாறி வருகிறது. கோவிலுக்கு பக்தர்கள் வராமல் தடுப்பதே, தி.மு.க., அரசின் கொள்கையாக இருக்கிறது. அதை தடுப்பதற்கு, தேர்தல் அன்று ஓட்டு போடுவதற்கு அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்.

ஓட்டு போட வெளியில் வந்தால் மட்டும் போதுமா... யார் ஆட்சிக்கு வரணும் என்பதை விட, யார் வரக்கூடாது என தெளிவாக சிந்தித்து ஓட்டு போடச் சொல்லணும்!

பெரம்பலுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகரன் பேச்சு:

தி.மு.க., ஆட்சியில், மகளிர் உரிமை தொகை, மகளிர் இலவச பஸ் பயணம், பள்ளிகளில் காலை உணவு, கல்லுாரி மாணவியருக்கு புதுமை பெண் போன்ற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதல்வர் தினமும் ஒரு திட்டத்தை அறிவித்து, செயல்படுத்தி வரு கிறார். எனவே, மீண்டும் தி.மு.க., தான் ஆட்சி அமைக்கும்.

'எல்லா சாலைகளும் ரோமை நோக்கி' என்பது போல, முதல்வரின் எல்லா திட்டங்களும் தேர்தலை நோக்கியே இருக்கே!






      Dinamalar
      Follow us