PUBLISHED ON : ஜன 30, 2026 03:42 AM

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர், ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை:
திராவிட
இயக்கத்தின் மூத்த தலைவர், முன்னாள் முதல்வர், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்
என்றும் பாராமல், 'மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முரட்டு அடிமையாக
பழனிசாமி செயல்படுகிறார்' என, துணை முதல்வர் உதயநிதி விமர்சித்துள்ளார்.
இலங்கை போரில், தமிழர்களை கொத்து கொத்தாக லட்சக்கணக்கில் கொன்று குவித்த
காங்., கட்சியின் அடிமை களாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர்
உதயநிதி, கனிமொழி, திருமா வளவன் போன்றவர்கள், வரலாற்றை மறந்துவிட்டு
பேசக்கூடாது! பழனிசாமியின் அருமை, பெருமைகளை இவர் தெரிஞ்சு வச்சிருக்கிற
அளவுக்கு, அ.தி.மு.க.,வினர் கூட தெரிஞ்சி வச்சிருப்பாங்களான்னு தெரியலையே!
இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் வீரபாண்டியன் பேட்டி:
தமிழகத்தில் அரசு அலுவலர் கள், கிராமப்புற சுகாதார பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கை களை இந்திய கம்யூ., கட்சி ஆதரிக்கிறது. இது கோரிக்கைக்கான போராட்டம். முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., ஆட்சிக்கு எதிரான போராட்டம் அல்ல.
அது சரி... 'எல்லாரும் அமெரிக்க அதிபர் டிரம்பை எதிர்த்து போராடுறாங்க'ன்னு சொன்னாலும் சொல்வார் போலிருக்கே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி:
தி.மு.க., அரசில், ஆண்டவன் குறித்து கருத்து சொன்னா லும், கவர்னர் கருத்து சொன்னாலும், அவர்கள் பதவியை பறிக்க தீர்மானம் கொண்டு வருகின்றனர். 'திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம்' என நீதிபதி கூறினால், அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என, அச்சுறுத்துகின்றனர். உண்மை நிலையை மக்களுக்கு எடுத்து சொன்னால், கவர்னரை பதவி நீக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.
'நீதிபதி, கவர்னரை பதவி நீக்கம் பண்ண முடியாது என்பது, உங்களை விட தி.மு.க.,வினருக்கு நல்லாவே தெரியும்... ஆனாலும், தனிப்பட்ட முறையில் சிலரை அவமதிப்பது தான் அவங்க நோக்கம்!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை, த.வெ.க., தலைவர் விஜய் குறித்து பேச்சு: தற் போது, புதிதாக ஒரு தம்பி அரசியலுக்கு வந்துள்ளார். யாரை கேட்டாலும், முதல் முறை வாக்காளர் கள், அவருக்குதான் ஓட்டு போடுவர் என செய்தி பரப்புகின்றனர். அப்படி எதுவும் கிடையாது. இன்றைக்கு இருக்கும் தம்பிகள், சினிமாவுக்கு செல்வர், விசில் அடிப்பர். ஆனால், தேர்தல் நேரத்தில், யாருக்கு ஓட்டு போட வேண்டுமோ, அவர் களுக்குதான் போடுவர்.
விசில் அடிக்கிற முதல் தலைமுறை வாக்காளர்கள், அந்த விசில் சின்னத்துக்கே ஓட்டு போட்டுட்டா என்னவாகும்?

