தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : பிப் 12, 2026 01:28 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2026 01:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: 'தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அரசு டாக்டர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என, 2019ம் ஆண்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த டாக்டர்கள் போராட்டத்தின் போது, நேரில் வந்து உறுதியளித்த ஸ்டாலின், இதுவரை சொன்னதை செய்யவில்லை. மறுபடியும் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் ஆகும் போது தான் மருத்துவர்களை சந்திப்பாரா?

இதன் வாயிலாக, நீங்க சொல்ல வரும் கருத்து, 'தேர்தலில் தி.மு.க.,வுக்கு அரசு டாக்டர்களும், அவர்களது குடும்பத்தினரும் ஓட்டளிக்க மாட்டாங்க' என்பது தானே!

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: கேரளாவிலும், தமிழகத்திலும் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில், 1,800க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளன. பொதுவாக, இந்நோய் வரும் முன்பே, நடவடிக்கை மேற்கொண்டால், நோயின் தாக்கம் குறையும்; மக்களுக்கும் பரவாது. தற்போது, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தலைமையில் வலுவான கூட்டணி அமைந்து விட்டதால், குழப்பத்தில் இருக்கும் ஸ்டாலின் அரசு, மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியனுக்கும், முதல்வர்குடும்பத்துக்கு புகழ் பாடவே நேரமில்லை என்பதால், மக்கள் மீது அக்கறை செலுத்த நேரமில்லை.

அதான், 'கோழிக்கறியை அரை வேக்காட்டுல சாப்பிடாதீங்க'ன்னு அருமையான அறிவுரை கூறி, அமைச்சர் நோய் தடுப்பு நடவடிக்கையை எடுத்துட்டாரே!

நடிகர் விஜய் குறித்து, தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: ஏப்ரல் வரை ஓட்டு கேட்பாரு. அப்புறம் அடுத்த படத்துக்கு கதை கேட்பாரு. தலைவரு தந்த கால்ஷீட் முடிவதற்குள், தேர்தலை நடத்தி முடிங்க. மின் கம்பத்தில் தொண்டன் ஏறி, தலைவர் என்ன கொள்கையை பேசுவாருன்னு பார்த்தா, அவரோ குத்தாட்டம் போடுறாரு.

தமிழக மக்களுக்கு நல்லது செய்யணும்னு, வருஷத்துக்கு, 500 கோடி ரூபாய் சம்பாதிக்கிற சினிமா தொழிலை விட்டுட்டு வந்திருப்பவரை இப்படி கலாய்க்கிறாரே!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு: டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 2' தேர்வை ரத்து செய்ததால், இளைஞர்கள் கண்ணீர் வடிப்பதும், துன்பப்படுவதும், தி.மு.க., அரசின் அவலட்சணத்தை காட்டுகிறது. இந்த சம்பவம், தமிழகத்திற்கு தலைகுனிவாக உள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆட்சிக்கு வர வேண்டும்.

பழனிசாமி தலைமையில் நடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2019ல் நடந்த, 'குரூப் -- -4' தேர்வு முறைகேடுகளை இவர் மறந்துட்டாரோ?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us