தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மார் 07, 2026 03:08 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 07, 2026 03:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிய தமிழகம் கட்சி நிறுவனர், டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை: நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் மீண்டும் மீண்டும் தொடரும் கொலை வெறியாட்டங்களை, போலீஸ் துறை தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற அராஜக செயல்களால் ஏழை, எளிய மக்கள் மற்றும் வணிகர்கள் மனதில் ஒரு அச்சத்தை உருவாக்கி, அதன் வாயிலாக, அவர்களுடைய உடைமையை கைப்பற்றுவதும், பிற சமூக மக்களை அப்பகுதியில் இருந்து துடைத்தெறிவதும் தான், அவர்களின் தலையாய நோக்கம். இது குறித்து, நாங்கள் பலமுறை வலியுறுத்தி இருக்கிறோம். இதை, நடுநிலை பேசும் சமூக நீதி பற்றாளர்களும் கண்டு கொள்ளவில்லை. சமூக நீதி பற்றி வாய் வலிக்க பேசக்கூடிய பெரும்பாலான கட்சி தலைவர்கள், தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிப்பதால், கமுக்கமா இருக்காங்க!

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பேச்சு: தி.மு.க.,வுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை பார்த்து மத்திய அரசும், அ.தி.மு.க-.,வும் பயந்திருக்கின்றன. தேர்தல் நெருங்கி விட்டதால், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தொடர்ந்து தமிழகத்திற்கு வர துவங்கி உள்ளனர். தமிழகத்திற்கு இரண்டு பேரும் மாறி மாறி வருகின்றனரே தவிர, தமிழகத்திற்கான எந்தத் திட்டங்களும் வருவதில்லை; எந்த நிதியும் மத்திய அரசு ஒதுக்குவதில்லை.

தமிழகத்தில் ஒன்பது, 'வந்தே பாரத்' ரயில்கள் ஓடுகின்றனவே... இவற்றை திராவிட மாடல் அரசா கொண்டு வந்துச்சு?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி: தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் அ.தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தால், எதிர்ப்பு ஓட்டுகள் தி.மு.க.,வுக்கும் செல்வதுதான் வழக்கம். தி.மு.க.,வுக்கு மாற்று அ.தி.மு.க.,தான். தமிழகத்தை பொறுத்த வரை, தேசிய கட்சிகள், ஆட்சியின் உள்ளே வர வாய்ப்பு இல்லை.

'நான் இல்லேன்னா நீ; நீ இல்லேன்னா நான்னு தி.மு.க., வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் ரகசிய டீலிங் இருக்கு'ன்னு த.வெ.க., தலைவர் விஜய் சொன்னது உண்மைதானோ?

தமிழக காங்., செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.நெடுஞ்செழியன் பேச்சு: 'மத்திய, மாநில உறவுகள் குறித்த, தேசிய அளவிலான உரையாடலை மீண்டும் துவக்க வேண்டும்' என்ற முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கை வரவேற்கத்தக்கது. அவரது தொலைநோக்கு பார்வைக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த கூட்டு முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில், மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி பகிர்வுக்கு தடை இருக்காது.

முதல்வர் ஸ்டாலின் கேட்பது, இப்ப உங்களுக்கு இனிக்கும்... ஆனா, மத்தியில் உங்க கட்சி ஆட்சியில் அமர்ந்துட்டா, அதுவே வேப்பங்காயா கசக்கும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us