தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மார் 08, 2026 01:44 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2026 01:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி: த.வெ.க., தலைவர் விஜய் எழுதி வைத்து பேசுவதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். எந்த தலைவர் அப்படி செய்யவில்லை? அதிகார மற்றும் பணபலம் உள்ள தி.மு.க.,வை, த.வெ.க.,வால் தான் வீழ்த்த முடியும். இதற்கு காரணம், த.வெ.க.,வில் இருப்பது சிங்கக்குட்டிகள்; அவை சீறிப்பாயும். தஞ்சையில், விஜய் வேன் பின்னாடியே ஓடி போய், ரோட்டுல விழுந்து கை, கால், முகத்தை சிராய்த்துக் கொண்ட சிங்கக்குட்டிகளின் நிலை பரிதாபம் தானே!

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு: தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., படுதோல்வி அடையும்' என, குறிப்பிட்டுள்ளார். அப்படி, எந்த பாதிப்பும் ஏற்படாது. பன்னீர்செல்வத்தின் தேனி மாவட்டம் மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் சிறு பாதிப்பு கூட இல்லை. தேர்தலில் அ.தி.மு.க., ஓட்டு வங்கியில் எந்த விதத்திலும் சிறிதளவு கூட பாதிப்பு ஏற்படாது.

அ.தி.மு.க.,வினர் தர வேண்டிய விளக்கத்தை இவரே சொல்றாரே... இவரும் ஒருகாலத்தில் அ.தி.மு.க.,வில் இருந்தவர் என்பதால், தான் ஆடா விட்டாலும் தசை ஆடுகிறதோ?

பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை: பெண் குழந்தைகளுக்கான இலவச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம், பல லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு போன்ற திட்டங்களை, தன் அரசின் சாதனையாக கூறி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். பிரதமர் மோடியின் ஜல்ஜீவன் திட்டத்தின் வாயிலாக, தமிழகத்தில், 90.36 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மோடி அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதை தவிர, வேறு எதையும் தி.மு.க., அரசு செய்யவில்லை.

குடிநீர் குழாய் இணைப்பை மத்திய அரசு கொடுத்தாலும், அதுல குடிநீரை மாநில அரசு தானே சப்ளை பண்ணுது... அதுவே, ஒரு சாதனை தானே!

த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: தே.ஜ., கூட்டணியில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு துவங்கி விட்டது. எங்களுக்குள், சுமுகமான முறையில் பேசி முடிவு செய்வோம். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும், யார் யாருக்கு என்ன பலம், எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு என்பதை உறுதி செய்து, கூட்டணிக்கு பலம் சேர்க்கும் வகையில், வெற்றி வியூகத்தின் அடிப்படையில் பேசி முடிவெடுப்போம்.

இவரது கட்சிக்கு, 12 சீட்கள் கேட்டிருந்தாங்களே... அதுல, பாதியாவது ஒதுக்குவாங்களா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us