sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மார் 27, 2026 03:17 AM

Google News

PUBLISHED ON : மார் 27, 2026 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:

அச்சாணி முறிந்த தேரும், 'இண்டி' கூட்டணியினர் ஆளும் மாநிலங்களும், சரியான இலக்கை நோக்கி நகரவே நகராது என்பதற்கு, தமிழகத்தை ஆளும் தி.மு.க., அரசே சிறந்த சான்று. தி.மு.க., தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலத்தின் சொந்த வருவாய், 26,000 கோடி ரூபாய் குறைந்துள்ளது. இதோடு, தமிழகத்தின் கடன் சுமை, 10.62 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இவ்வளவு கடன் இருந்தும், உங்க கூட்டணிக்கு தலைமை வகிக்கும், அ.தி.மு.க., சார்பில் ஏராளமான இலவச வாக்குறுதிகளை தந்திருக்காங்களே... அவை எல்லாம் தமிழகத்தை இன்னும் கடனாளியாக்கிடாதா?

பா.ம.க., பொருளாளர் திலகபாமா பேட்டி:

காரைக்குடியில் நடந்த தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், தி.மு.க.,வினர் அத்துமீறி அடிதடியில் இறங்கிய சம்பவத்தில், முதல்வர் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க.,வினர் தோல்வி பயத்தால், வன்முறையை கையில் எடுத் துள்ளனர். சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது.

தேர்தலுக்கு முன்னாடியே இப்படி என்றால், தி.மு.க., மீண்டும் ஜெயித்து ஆட்சிக்கு வந்துட்டா, அந்த கட்சியினரை கட்டுப்படுத்த முடியுமா?

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பேட்டி:

தி.மு.க., வேட்பாளர்கள் நேர்காணலில், என் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை பற்றி சில விஷயங்களை என்னிடம் கேட்டனர். 'சிறப்பு வாக்காளர்கள் திருத்த பட்டியலில், எவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதை தொடர்ந்து கண்காணித்தீர்களா... தொகுதிக்கு என்ன செய்து கொடுத்தீர்கள்?' என்றும் கேட்டனர். தொகுதிக்கு செய்ததை குறித்து தெரிவித்தேன். 'போய் வாருங்கள்; யோசித்து சொல்கிறோம்' எனக் கூறி, அனுப்பி வைத்தனர்.

'உட்கட்சி ஜனநாயகம்' என்ற போர்வையில், தி.மு.க., நடத்தும் ஏராளமான நாடகங்களில் ஒன்று தான், உங்களிடம் நடத்திய நேர்காணலும்!

புதுச்சேரியில் செயல்படும், லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேட்டி: புதுச்சேரியில், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டிய தேவையில்லை. தமிழகத்திலும் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற, அனைத்து தொகுதிகளிலும் பாடுபட உள்ளோம். த.வெ.க.,வில், தி.மு.க.,வினர் ஊடுருவி உள்ளனர்; விஜயை தனித்து நிற்க வைத்து தோற்கடிப்பது தான் அவர்கள் திட்டம்.

இவ்வளவு சொல்றவர், விஜயை தனித்து நிற்க வைத்தவங்க யார் யார் என்பதையும் போட்டு உடைச்சுடலாமே!






      Dinamalar
      Follow us