sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மார் 31, 2026 03:48 AM

Google News

PUBLISHED ON : மார் 31, 2026 03:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி: அ.தி.மு.க.,வை, பா.ஜ.,வின் அடிமை என, முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி சொல்கிறார். ஆனால், அவர் தான் மற்ற கூட்டணி கட்சிகளை அடிமையாக நடத்தி வருகிறார். கூட்டணி கட்சிகளிடம், தி.மு.க., சர்வாதிகாரத்தை கடைப்பிடிக்கிறது. அந்த கூட்டணியில் இணக்கமான சூழல் இல்லாதது, தேர்தலில் எதிரொலிக்கும். தி.மு.க., கூட்டணியில் உள்ளவர்கள், தயக்கத்துடன் தேர்தலை சந்திக்கின்றனர். ஆனால், அ.தி.மு.க., தெம்போடும், திராணியோடும், நம்பிக்கையுடனும் தேர்தலை சந்திக்கிறது. கூட்டணி கட்சிகளை, தி.மு.க., அடிமைகளா நடத்தியதற்கு, கமல் கட்சிக்கு கடைசி நேரத்தில், 'கல்தா' கொடுத்த உதாரணம் ஒன்றே போதுமே!

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி: சட்டசபை தேர்தலில், எங்கள் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். தேர்தல் கருத்துக் கணிப்புகளும் எங்களுக்கு சாதகமாக உள் ளன. போர் சூழல் நேரத்திலும் கூட, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதேபோல், தமிழக அரசும் வரியை குறைக்க வேண்டும்.

தேர்தல் நேரத்துல, வரி குறைப்பு அறிவிப்பை, மாநில அரசால் வெளியிட முடியாதுன்னு தெரிஞ்சு தானே இப்படி பேசுறீங்க!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: தமிழகத்தின் கடன் வளர்ச்சியை தான் ஆட்சியாளர்கள், வளர்ச்சி என காட்டுகின்றனர். தமிழக அரசு ஐந்து ஆண்டுகளில், 4.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. 'வரிகளால் வரும் வருவாய் எவ்வளவு... கடன்கள் எதற்காக பெறப்படுகின்றன... கடன் பெற்று மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன?' என்ற கேள்விகளை ஒவ்வொரு குடிமகனும் எண்ணி பார்க்க வேண்டும்.

தேர்தலின் போது ஓட்டுக்கு தரப்படும் பணத்தை எண்ணி பார்க்கிறப்ப, இந்த கேள்விகள் எல்லாம் குடிமகன்களுக்கு மறந்து போயிடும்!

கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட சுப்ரமணியம் பேட்டி: கடந்த மூன்றாண்டுகளில், கரூர் மாவட்டத்தில் இருந்து, 115 காங்., நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு சென்று விட்டனர்; இதற்கு, கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி தான் காரணம். கரூரில் காங்., கட்சி அழிந்து போவதற்கும் இவரே காரணம். இது குறித்து, காங்., தலைவர் கார்கே, எம்.பி., ராகுல் ஆகியோரிடம் புகார் அளிக்க உள்ளோம்.

இவரது மாவட்ட தலைவர் பதவி பறிப்பின் பின்னணி யிலும், ஜோதிமணி தான் இருந்திருப்பாங்க போலும்... அதான் இந்த அளவுக்கு காட்டமா பேசுறாரு!






      Dinamalar
      Follow us