sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஏப் 07, 2026 03:18 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 07, 2026 03:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினரான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேட்டி: தி.மு.க., துணை பொதுச்செயலர் ராஜாவின் ஆடியோ குரல் பதிவு, தி.மு.க., வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், அவர் கூறி இருப்பது எல்லாம் உண்மை தான். நான் அப்போது கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தேன்; அந்த நேரத்தில், அவரது உடல்நிலை சீர்குலைந்து இருந்தது. எதையும் நிர்வகிக்க இயலாத நிலையில் அவர் இருந்தார். அந்த இடைப்பட்ட நேரத்தில், ஸ்டாலின் கையில் கட்சி சென்று விட்டது. அப்போதைய தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் கூட ஏதும் பேச முடியாதபடி, மவுனமாக இருந்தார். தனக்கு பிறகு, ஸ்டாலின் கைக்கு கட்சி போகணும் என்று தானே, கருணாநிதியும் பாதை போட்டு வச்சிருந்தார்... அதன்படி, கட்சி ஸ்டாலின் வசம் போனதில், என்ன சிதம்பர ரகசியம் இருக்குது?

தமிழக கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் மாநில செயலர் சின்னசாமி அறிக்கை: வடுகர் இனத்தை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், கம்மவார்களை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் சேர்க்க வேண்டும். தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்களுக்கு, மொழிவாரி சிறுபான்மையினர் என்ற சான்றிதழை, தடையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் உடைய கட்சிகளுக்கு, எங்கள் சமுதாயத்தின் ஆதரவு அளிக்கப்படும்.

இவரது சங்கத்தின் ஆதரவு இல்லாம, எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாதுன்னு சொல்ல வர்றாரா? மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் பேச்சு: பா.ஜ.,வின் தில்லுமுல்லு அரசியலை நம்பி, முதல்வர் நாற்காலிக்காக, தன் கொள்கைகளை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அடகு வைத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தலை சீர்குலைத்து, தனக்கு வெற்றி தேடி தருவார் என்ற நம்பிக்கையில், மீண்டும் பா.ஜ.,வுடன் கைகோர்த்துள்ளார்.

இவங்க மட்டும் தனியா நின்னா சட்டசபைக்குள்ள போக முடியுமா... தி.மு.க., தயவுல தானே, இவங்க கட்சியினரும் எம்.எல்.ஏ.,வாக முடியுது!

தமிழக காங்., முன்னாள் பொதுச்செயலர் எஸ்.டி.நெடுஞ்செழியன் அறிக்கை: மதச்சார்பின்மை, சமூக நீதி, ஏழை, எளிய மக்களின் உரிமைகள், இளைஞர்களின் எதிர்காலம் ஆகியவற்றுக்கு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் முன்னுரிமை அளித்து வருகிறார். அந்த அடிப்படையில் தான், காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்தலில், 100 சதவீதம் வெற்றிக்கு அர்ப்பணிப் புடன், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியினர் பணி யாற்றுவர்.

காங்., சார்பில் கடந்த முறை, எம்.எல்.ஏ.,க்களா இருந்தவங்க, இந்த கொள்கைகளுக்காக ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டாங்களா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us