sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

1


PUBLISHED ON : ஏப் 13, 2026 12:28 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 13, 2026 12:28 AM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., இன்பதுரை பேச்சு: ராதாபுரம் தொகுதி, தி.மு.க., வேட்பாளரான சபாநாயகர் அப்பாவு, ஓட்டு கேட்டு வரும் போது, 'ராதாபுரம் கால்வாய் திட்டம் என்ன ஆனது' என்று மக்கள் கேட்க வேண்டும். ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் வந்தால், அவரது கல் குவாரிகளில் வேலை நடைபெறாது. தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றதும், அப்பாவுவை, கைவிலங்கு போட்டு இழுத்து செல்வோம்.

அமையவிருக்கும், 'திராவிட மாடல் 2.0' ஆட்சியில் அமைச்சராகணும் என்ற கனவில் இருக்கும் அப்பாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தர்றாரே!

புதிய நீதி கட்சி நிறுவனர், ஏ.சி.சண்முகம் பேட்டி: நடிகர் விஜய் கட்சிக்கு என, தனி ஓட்டு வங்கி உருவாகி விட்டது... தி.மு.க.,வுக்கு விழ வேண்டிய ஓட்டுகளில், 70 சதவீதம் விஜய்க்கு கிடைக்கும். மற்ற கட்சிகளின் ஓட்டுகள், 30 சதவீதம் விழும். மொத்தத்தில் அவரின் கட்சிக்கு, தொகுதிக்கு, 20,000த்திலிருந்து, 40,000 ஓட்டுகள் வரை கிடைக்கும்.

அடுத்த தேர்தலில், விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க, இப்போதே அச்சாரம் போடுறாரோ?

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: சேலம் மாவட்டம், சங்ககிரி அடுத்த தேவூர் அரசு நடுநிலை பள்ளியில், மாணவி யருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பாலசுப்பிரமணியன் என்ற ஆசிரியர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே, இன்னொரு, போக்சோ வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவரை மாணவியர் படிக்கும் பள்ளிக்கு, தி.மு.க., அரசு மீண்டும் நியமித்துள்ளது. தி.மு.க., ஆட்சியில், அரசு பள்ளிகள் ஆபத்தானதாக மாறியிருப்பதற்கு, இதுவே உதாரணம்.

இந்த மாதிரி ஆசிரியரை, எங்காவது மலையில இருக்கிற பள்ளியில் நியமிக்காம, 'திருடன் கையில் சாவியை கொடுத்த கதை'யாக, மகளிர் பள்ளியில் நியமிச்சிருக்காங்களே!

இந்திய கம்யூ., கட்சியின் தேசிய குழு உறுப்பினர் முத்தரசன் பேச்சு: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முதல்வராக இருந்த போது, அவருக்கு தனி செயலராக இருந்தவரை, தமிழக அரசின் தலைமை செயலராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. வரலாற்றில் இப்படி நடந்தது கிடையாது. எஞ்சியிருக்கும் நாட்களில் என்ன மாற்றம் செய்வர் என்பது புரியாத புதிராக உள்ளது. தேர்தல், ஜனநாயக முறையில் நடைபெறுமா என்றும் தெரியவில்லை. தில்லுமுல்லு செய்து, தி.மு.க., வெற்றியை பறிக்கும், பா.ஜ.,வின் வேலையா இது என்பது, தேர்தலுக்கு பிறகே தெரியும்.

ஒரு வேளை, சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி தோற்றால், இப்பவே அதற்கான காரணத்தை கண்டுபிடிச்சு வைக்கிறாரோ?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us