sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 01, 2026 ,சித்திரை 18, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மே 01, 2026 12:09 AM

Google News

PUBLISHED ON : மே 01, 2026 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி:

விஜய்க்கு வரும் கூட்டத்தை பார்த்தால், நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆவேசமாக, ஆக்ரோஷமாக அவர் பின்னால் கூட்டம் வருகிறது. இளைஞர்கள், மாணவ - மாணவியர் மட்டுமல்ல, நடுவயது பெண்கள் ஆதரவும் பெருகியுள்ளது. த.வெ.க., ஓட்டுகளின் எண்ணிக்கையை பொறுத்துதான், தமிழகத்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு இருக்கும். அரசியல் வியூகம் வகுப்பதெல்லாம், அந்த அடிப்படையில தான் இருக்கும்.

'த.வெ.க., ஓட்டு வங்கியை பார்த்துட்டு, அந்த கட்சி கூட்டணிக்கு போயிடுவோம்'னு சொல்லாம சொல்றாரோ?

தமிழக ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி:

தி.மு.க., ஆட்சியில், 4,602 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம். 166 முருகன் கோவில்களுக்கு திருப்பணிகள் செய்துள்ளோம். பழனியில், முருக பக்தர்கள் மாநாடு நடத்தினோம். முருகனுக்கு சிறப்பு சேர்த்த ஆட்சி தி.மு.க., ஆட்சிதான். தமிழ் கடவுள் முருகன் எல்லா வகையிலும், திராவிட மாடல் ஆட்சிக்கு துணையாக இருக்கிறார். நிச்சயமாக திராவிட மாடல் ஆட்சி, 2.0 வரும்; ஸ்டாலின் தான் முதல்வராக வருவார்.

ஆனாலும், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற விடாமல் தடுத்த இவங்களை முருகன் மன்னிப்பாரா?

பா.ம.க., தலைவர் அன்புமணி பேட்டி:

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த போடூரில், நான்கு இடங்களில் சட்ட விரோதமாக செயல்பட்ட மதுக்கடைகளை, அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் சூறையாடியுள்ளனர். எந்த ஒரு சிக்கலுக்கும், மக்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது விரும்பத்தக்க தீர்வு அல்ல என்றாலும், அப்படி ஒரு சூழலுக்கு, அந்த பெண்களை தள்ளியது, தமிழகத்தை ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்த தி.மு.க., அரசு தான். எனவே, அந்த பெண்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மேலும், தமிழகம் முழுதும் செயல்படும் சட்டவிரோத மதுக்கடைகளை உடனே மூட வேண்டும்.

'டாஸ்மாக்' மதுக்கடைகளை மூடுங்கன்னு கோரிக்கை வச்ச நிலை மாறி, இப்ப சட்டவிரோத மதுக்கடைகளை மூடுங்கன்னு கேட்க வேண்டியதா போயிடுச்சே!

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு:

கடந்த, 2006 - 2011 தி.மு.க., ஆட்சியில், நான் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தபோது, வீட்டு மனைகள் ஒதுக்கீடு விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறி, 2020ல் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பொய் வழக்கு. அதனால் நீதி வென்றது.

அவசரப்பட வேண்டாம்... இந்த தீர்ப்பை எதிர்த்து, அமலாக்கத் துறை மேல்முறையீடு போகவும் வாய்ப்பிருக்கு!






      Dinamalar
      Follow us