sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

3


PUBLISHED ON : மே 18, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 18, 2026 12:06 AM

3


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:

'நீட்' நுழைவுத் தேர்வுக்காக, இரவு பகலாக படித்த, 22 லட்சம் மாணவர்களின் உழைப் பும், கனவும் குற்ற கும்பல்களால் சிதைக்கப் பட்டுள்ளது. இந்த மன உளைச்சலுக்கு பொறுப்பேற்க போவது யார்? இதுவரை ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு புகார்கள் இல்லாமல் நடந்ததாக எனக்கு நினைவில்லை. இதனால் தான் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என, போராடி கொண்டிருக்கிறோம்.

தி.மு.க.,விடம் போராடி ஒரு சட்டசபை தொகுதி சீட் கூட வாங்க முடியாதவர், என்ன போராட்டம் நடத்தி கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர போறாராம்?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை:

வீசும் தென்றல் காற்றுக்கு களைப்பேதும் இல்லை; வீசிக்கொண்டே இருக்கிறது. ஓடிக்கொண்டிருக்கும் வற்றாத ஜீவநதிக்கு சலிப்பேதும் இல்லை; ஓடிக்கொண்டே இருக்கிறது. சுழன்று கொண்டிருக்கும் உலக பந்துக்கு அயர்ச்சியே இல்லை; சுழன்று கொண்டே இருக்கிறது. அதேபோல் எங்கள் அரசியல் பயணமும், சமூக சேவையும், மக்கள் நலப்பணியும் எந்த பதவியும் இல்லாமல் தொடரும்; தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சென்னை, ராயபுரம் சட்டசபை தொகுதியில் தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் தோற்ற விரக்தியில், வேதாந்தம் பேசுறாரோ?

நடிகர் எஸ்.வி.சேகர் அறிக்கை:

'உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க' என்பதே சனாதன தர்மத்தின் மையக் கருத்து. இதைத்தான் தமிழில், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொல்கிறோம். நம்ம ஊர் கொசுவையே அழிக்க முடியாதவங்க, சனாதனத்தை அழிக்க முடியுமா? இந்த உலகில் எது இருக்க வேண்டும், எது இருக்கக் கூடாது என தீர்மானிப்பவன் இறைவன் ஒருவனே; எந்த ஒரு மனிதனும் அல்ல.

'சனாதனத்தை ஒழிக்கணும்'னு மீண்டும் ஏடாகூடமா பேசி, தி.மு.க., வுக்கு சாதகமா முழங்கிட்டு இருந்த எஸ்.வி.சேகரின் ஆதரவையும் உதயநிதி இழந்துட்டாரே!

மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் பேட்டி:

வரும் ஜூன் 30ம் தேதியுடன், 100 நாள் வேலை திட்டத்திற்கு சமாதி கட்டப்படவிருக்கிறது. கடந்த நிதியாண்டில், 22 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாட்கள் வேலை வழங்கப் பட்டுள்ளது. திட்ட பயனாளி களான அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என் பது தான் சட்டம். ஆனால், ஏழைகளுக்கு சாதகமான சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய பா.ஜ., அரசு எப்போதும் அக்கறை காட்டியது இல்லை.

ஊரக வேலை உறுதி திட்டம், ஜூலை 1 முதல் புது பெயரில், 125 நாட்களாக உயர்த்தப்படுவதை சாமர்த்தியமா மறைக்கிறாரே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us