தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஜூன் 07, 2026 12:11 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2026 12:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்., கட்சியைச் சேர்ந்த, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி:

தமிழக மக்களின் மிகப்பெரிய சாதனை என்று சொன்னால், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, பிரதமர் மோடி ஏழு முறை தமிழகத்திற்கு வந்தும், உள்துறை அமைச்சர் அமித் ஷா எட்டு முறை வந்து ஆதரவு திரட்டியும், சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வால் ஒரே ஒரு இடத்தை தான் பெற முடிந்தது. பா.ஜ.,வின் பாச்சா தமிழகத்தில் பலிக்கவில்லை.

உங்க கட்சியின் ராகுல், தமிழகத்தில் மூன்று முறை பிரசாரம் செய்தும், தி.மு.க.,விடம் வாங்கிய 28ல், ஐந்து இடங்களில் தானே ஜெயிச்சிருக்காங்க... அது சிறப்பான வெற்றியா?

தி.மு.க., முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி:

தினமும் தலைமை செயலகத்தில் அமர்ந்திருப்பது மட்டுமே முதல்வரின் பணி என, விஜய் நினைத்து கொண்டிருக்கிறார். 24 மணி நேரமும் தமிழகத்தின் நிலையை கண்காணித்து, அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். அதற்கு உதாரணமாக செயல்பட்டவர் ஸ்டாலின். எந்த நிமிடத்திலும், எந்த அமைச்சரும், அதிகாரிகளும் முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற முடியும். ஊடகங்களில் வரும் செய்திகளை அவரே கண்காணித்து, என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரையை எங்களுக்கு வழங்குவார்.

இப்படி எல்லாம் செயல்பட்ட ஸ்டாலினை, கொளத்துார் தொகுதி மக்கள் ஏன் தோற்கடிச்சாங்களாம்?

பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலராக இருந்து, தமிழக வெற்றிக் கழகத்துக்கு தாவிய பார்த்திபன் பேட்டி:

தி.மு.க.,வில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு கிராமமாக சென்று கட்சியை வளர்த்தேன். 2016, 2021 தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை. என் சொத்துக்களை விற்று, கட்சிக்காக பணியாற்றியுள்ளேன். தமிழகத்திலேயே சொத்துக்களை விற்று கட்சி நடத்தியது நான் ஒருவனாகத் தான் இருப்பேன். தலைமை கண்டுகொள்ளாததால், த.வெ.க.,வில் சேர்ந்து விட்டேன்.

இனிமே விற்க சொத்துக்கள் இல்லாம, த.வெ.க.,வுக்கு தாவிட் டாரா அல்லது விற்ற சொத்துக்களை திரும்ப வாங்கிடணும்கிற வெறியில சேர்ந்திருக்காரான்னு தெரியலையே!

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேட்டி:

'டாஸ்மாக்' மது கடைகளை மூடுவதை அரசு கண்துடைப்பாக செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தில் பேசுவது போல் இல்லாமல், மக்கள் நலனுக்காக ஆக்கப்பூர்வமாக முதல்வர் விஜய் பேச வேண்டும். எந்த கூட்டணியில் நின்று வெற்றி பெற்றோமோ, அந்த கட்சியுடன் தான் கூட்டணி தர்மத்தோடு இருக்கிறோம்; அதில் தான் தொடர்வோம்.

எல்லா கூட்டணி கட்சிகளும், தி.மு.க.,வை விட்டு போயிட்டதால, உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்டு வாங்கிடலாம்னு இருக்காங்களோ?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us