தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஜூலை 03, 2026 12:59 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2026 12:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு:

எங்கள் கூட்டணியில் இருந்தவர்களை தேர்தலில் வெற்றி பெற வைத்து, அவர்களின் தகுதியை உயர்த்தியது தி.மு.க.,தான். அவர்கள் வெற்றி பெற்றதால்தான் இன்றைக்கு பதவி தருவதாக த.வெ.க.,வினர் வீடு தேடி வந்து அழைக்கின்றனர். காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், 'தி.மு.க.,விற்கு பதிலடி கொடுப்போம்' என கூறுகிறார். தி.மு.க., சுமந்த மூட்டை தான் காங்., கட்சி.

கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 96 இடங்களில் மட்டுமே ஜெயித்த தி.மு.க., 34 காங்., - எம்.எல்.ஏ.,க்கள் முதுகில் ஏறி ஆட்சியில் அமர்ந்தும், அவங்களுக்கு ஆட்சியில் பங்கு தராமல், 'அல்வா' தந்த கதையை இவர் மறந்துட்டாரோ?

அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொண்டர்கள் எந்த மாய வலையிலும் சிக்க மாட்டார்கள். சமீபகாலமாக தி.மு.க., மற்றும் த.வெ.க., போன்ற கட்சியினர், அ.தி.மு.க., தலைவர்களை புகழ்ந்து பேசுவதும், தொண்டர்கள் மீது அக்கறை காட்டுவதும் தொடர்ந்து நடக்கிறது. ஆனால், இந்த ஆசை வார்த்தைகளும், குதிரை பேரங்களும் இரு பெரும் தெய்வங்களின் உண்மையான தொண்டர்களிடம் எடுபடாது.

இவரது கட்சியில் பாதிக்கும் மேற்பட்டவங்க, த.வெ.க., முகாமுக்கு தாவிட்டாங்க... கடைசியில், பழனிசாமிக்கு பக்கபலமா இவர் மட்டும் தான் இருப்பாரோ?

பா.ஜ., சிறுபான்மை பிரிவின் தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் பேட்டி:

திருப்பரங்குன்றம் பிரச்னையில் தீபத்துாணில் தீபம் ஏற்றும் ஹிந்துக்களின் கலாசாரத்தை தடுக்க முயன்ற தி.மு.க., அரசு போல, த.வெ.க., அரசும் நடந்தால் கண்டிக்கத்தக்கது. தி.மு.க.,வின் பினாமி அரசாக த.வெ.க., அரசும் செயல்படக் கூடாது.

வாஸ்தவம் தான்... சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை மனதில் வைத்து த.வெ.க., அரசும் செயல்பட்டால், தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஏற்பட்ட கதிதான் இவங்களுக்கும்!

பா.ஜ., தமிழக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பேட்டி:

த.வெ.க., அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. சிறுபிள்ளைகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்; மின்வெட்டு போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இந்த அரசு திறனற்ற அரசாக உள்ளது. பொதுமக்கள், இந்த அரசால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். த.வெ.க., வில் குதிரை பேரம் நடப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.

'அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையும் த.வெ.க., அரசின் செயல் பாடுகளை உன்னிப்பா கவனிச்சிட்டு இருக்கு'ன்னு சொல்லாம சொல்றாரோ?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us