தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஜூலை 15, 2026 12:42 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2026 12:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா பேச்சு:

எந்த கட்சியில் இருந்தாலும், அவர்கள் நாட்டு முன்னேற்றத்திற்காக செயல்பட வேண்டும்.சமுதாயத்தில் பணத்தின் ஆதிக்கம், லஞ்சம்அதிகரித்திருப்பது, ஒழுக்கம், பண்பாட்டு மதிப்புகள் குறைய காரணமாக உள்ளது. தேசிய கல்வி கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டேன். இரண்டு மொழிகள் போதுமானவை. தேவையான நேரத்தில் மற்றொரு மொழியை கற்றுக்கொள்ளலாம். தமிழகத்தில் முதல்வர் விஜயின்செயல்பாடுகள் இதுவரை நன்றாக இல்லை.

காலம் போகட்டும் பார்ப்போம். தி.மு.க., ஆதரவு, 'டிவி'க்கள் நடத்தும் பட்டிமன்றங்களில் பேசி பேசி, முழு தி.மு.க.,காரராகவே மாறிட்டாரோ?

பா.ஜ., தமிழக செயலர் வினோஜ் செல்வம் அறிக்கை:


த.வெ.க., அரசு, தமிழகத்தில் இடைத்தேர்தல்களை திணிக்கிறது. குதிரைகளை பேரம் பேசி வாங்குவது போல எம்.எல்.ஏ.,க்கள் விலை போய் கொண்டிருக்கின்றனர். சென்ற இடமெல்லாம் தோல்விக்கு வித்திடும் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூட, தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களை முதல்வர் ராஜினாமா செய்ய சொன்னதாக கூறியுள்ளார். த.வெ.க., அரசின் அதிகார துஷ்பிரயோக செயல்பாடுகள் மீது, கவர்னர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

மத்திய பா.ஜ., அரசின் கட்டுப்பாட்டில் கவர்னர் இருப்பதால், நடவடிக்கை எடுப்பார்னு நம்புறாரோ?

காங்., பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தமிழக துணை தலைவர் ரவிராஜ் அறிக்கை:


காமராஜர் ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல; கல்வியை ஏழை மக்களின் இல்லங்களுக்கு கொண்டு சென்ற புரட்சியாளர். அவரது வாழ்க்கையை இன்றைய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகளில், காமராஜரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் அல்லது ஆவண படத்தை திரையிட அரசு உத்தரவிட வேண்டும்.

தான் படிக்கா விட்டாலும், தமிழகத்தின் எதிர்கால தலைமுறையினர் படிக்க வேண்டும் என பாடுபட்ட காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை கண்டிப்பா மாணவர்களிடம் சேர்க்கணும்!

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை:


வழக்கமாக, ஜூன் 12ம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணை, போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் திறக்கப்படாதது, டெல்டா விவசாயத்திற்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனவே, காவிரி டெல்டா மாவட்டங் களை வறட்சி பாதித்த பகுதிகளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்; அனைத்து விவசாயிகளுக்கும், ஏக்கருக்கு 15,000 ரூபாய் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

அதற்கு தான் ஏற்கனவே சிறப்பு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிச்சிருக்காங்களே... அது, இவரது கவனத்துக்கு வரலையோ?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us