தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஆக 15, 2026 01:11 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2026 01:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ.,வைச் சேர்ந்த, ஊட்டி எம்.எல்.ஏ., போஜராஜன் பேட்டி:
'நாட்டின் பிரதமராக தெற்கில் இருந்து ஒருவர் வர வேண்டும்' என, த.வெ.க.,வைச் சேர்ந்த பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். கர்நாடகாவில் இருந்து தேவகவுடா, பிரதமராக இருந்துள்ளார். மூப்பனாருக்கும் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. இதுபோன்ற வரலாறுகள் த.வெ.க.,வினருக்கு தெரியவில்லை. தென் மாநிலங்களும், தமிழகமும் ஒற்றுமையாக இருந்தால் தான், தமிழரை பிரதமராக தேர்வு செய்யும் காலம் வரும்.
'தமிழரான மூப்பனாருக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்தப்ப, அதை தடுத்தது தி.மு.க., தான்' என்ற வரலாற்றை இவர் சொல்லாம தவிர்ப்பதில், எதிர்கால கூட்டணி கணக்குகள் இருக்குமோ?


காங்., தமிழக செய்தி தொடர்பாளர் சந்திரசேகரன் பேட்டி:

'கர்நாடகாவில் எந்தக் கட்சியானாலும், மேகதாது அணை கட்டுவதில் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றன' என கூறும், தி.மு.க.,வின் அமைப்பும், கர்நாடகாவில் இருக்கிறது. 'கர்நாடக மாநில தி.மு.க., அமைப்பு, மேகதாது அணை கட்டக்கூடாது என வலியுறுத்துமா' என்று கேட்டால், அம்மாநில தி.மு.க.,வினர் பதில் சொல்லாமல் பம்முகின்றனர்.

கர்நாடக மாநில தி.மு.க., என்பது, 'லெட்டர் பேடு' அளவில் தான் இயங்குது... ஆனா, அங்க உங்க கட்சி ஆட்சியில் இருந்துட்டே, 'தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது'ன்னு, அடம் பிடிக்குதே!

மா.கம்யூ., கட்சியின், தமிழக செயலர் சண்முகம் பேச்சு: மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி, ஊரக மருத்துவ நலத்துறை மற்றும் பொது மருத்துவம், நோய் தடுப்பு ஆகிய துறைகளின் இயக்குநர் பொறுப்புகள், தற்போது வரை, பதவி உயர்வின் வாயிலாக, டாக்டர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன. இனி, இந்த பதவிகளுக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மருத்துவத் துறை சார்ந்த பணிகளை, வேறு துறையில் பயின்ற வர்களால் திறம்பட நிர்வகிக்க வாய்ப் பில்லை. எனவே, அந்தந்த துறைகளில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்.

'எல்லா துறைகளிலும், அதுல நிபுணத்துவம் பெற்றவங்களை தான் நியமிக்கணும்'னு, சொல்றாரே... 'டாஸ்மாக்' நிர்வாகத்துக்கும் இது பொருந்துமா?

பா.ஜ., விவசாய அணியின் தமிழக தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை:

எம்.ஜி.ஆர்., ஆட்சியில் துவக்கப்பட்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் நிதி மற்றும் நிர்வாக நெருக்கடிகளை சந்தித்து வருகிறது; துணைவேந்தர், பதிவாளர் பதவிகள் காலியாக உள்ளன. தகுதியான துறை தலைவர்கள் இல்லை; பத்திரிகைகள் வாங்குவதில்லை; நுால கர்கள் இல்லை; ராஜராஜன் விருது வழங்குவதில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தை போல, தஞ்சை பல்கலைக் கழகத்திற்கும் முதல்வர் விஜய் முன்னுரிமை கொடுத்து மேம்படுத்த வேண்டும்.

எம்.ஜி.ஆர்., துவங்கிய கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி, இது பற்றி சட்டசபையில் குரல் கொடுத்திருக்க வேண்டாமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us