தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஆக 23, 2026 12:44 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2026 12:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேட்டி:

லோக்சபா தொகுதி மறுவரையறை விவகாரத்தில், தமிழக சட்டசபை தீர்மானமும், காங்., செயற்குழு தீர்மானமும் ஒரே நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. தமிழகத்தின் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் கூடாது. இப்போதுள்ள 39 என்ற எண்ணை, அடுத்த 25 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்பது தான் காங்., நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டை, தமிழகத்தின் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆதரிக்கின்றன என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்க தீர்மானத்தை ஆதரிக்கும் ரெண்டு கட்சிகளையும், 'இண்டி' கூட்டணியில் சேர்த்துடலாம்னு நினைச்சா, அது நடக்கவே நடக்காது!

தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் அறிக்கை:

ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப் பாதையில் விரைந்து சென்று கொண்டிருந்த ஒரு பஸ்சை ஒப்படைத்திருக்கிறோம். அவரை சுற்றி நின்று, ஓட்டுவதற்கு பலரும் ஆலோசனைகள் சொல்கின்றனர். சரியாக சொல்கின்றனரா, இல்லையா, யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என ஓட்டுநர் தெரிந்து கொள்வதற்குள் ஐந்தாண்டுகள் முடிந்து விடும்; வண்டி பல 100 கி.மீ., பின்னால் வந்து விடும். நாம் வேகமாக இறங்கிக் கொண்டிருக்கிறோம்; காலமே நீ ஓர் அதிசய பெட்டகம்.

புதுசா ஓட்டுறவர், உங்களை விட சிறப்பா ஓட்டி மலை உச்சிக்கு போகவும் வாய்ப்பிருக்கே... அதேநேரம், அந்த பஸ்சை திரும்பவும் உங்க கையில் மக்கள் ஒப்படைப்பாங்களா என்பது சந்தேகம் தான்!

பா.ஜ., தமிழக பொதுச்செயலர் வினோஜ் செல்வம் அறிக்கை:

'கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்' என, சட்டசபையில் தி.மு.க., - எம்.எல்.ஏ., அம்பேத் குமார் பேசியிருப்பதும், 'முஸ்லிம் சகோதரர்கள்' என குற்றவாளிகளை கூறுவதும், மிக கடுமையான அதிர்ச்சியை அளிக்கிறது. 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பயங்கரவாதிகள் குறித்து, தி.மு.க., -- எம்.எல்.ஏ.,வுக்கு இவ்வளவு கவலை இருக்கிறது. ஆனால், குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்கள் குறித்து இவரும், தி.மு.க.,வும் என்றைக்காவது கவலைப்பட்டது உண்டா ?

ஓட்டு வங்கிக்கு ஆதாயம் கிடைக்கும்னு தெரிஞ்சா மட்டுமே, தி.மு.க.,வினர் கவலைப்படுவாங்க!

திரைப்பட இயக்குநரும், த.வெ.க., நட்சத்திர பேச்சாளருமான ரவி மரியா பேச்சு:

த.வெ.க., ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், 'வெற்றி டிஜிட்டல் சேனல்' தொடங்குவது பாராட்டுக்குரியது. இந்த வெற்றி சேனல் வருவதற்கு முன், 107 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்; சேனல் வந்த பின், 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

எதிர்க்கட்சியினருக்கு ஒன்றி ரண்டு இடங்களை கூட விட்டு வைக்கிற திட்டம் இல்லையா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us