தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : செப் 06, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2026 01:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு:

தமிழக சட்டசபை கூட்டம், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி போல இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். முதல்வர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளியானபோது, அப்படத்தின் போஸ்டரை, அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வினர் கிழித்ததால் தான், அக்கட்சி ஆட்சிக்கு வரவில்லை என, சட்டசபையில் த.வெ.க., அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்க, இவர்களுக்கு சினிமா பட போஸ்டரை கிழித்தது தான் பிரச்னை.

அதெல்லாம் இருக்கட்டும்... வர வர உங்க பேச்சு, பேட்டிகள் எல்லாம் நடிகர் வடிவேலு காமெடி காட்சிகளையே மிஞ்சிட்டதா, சமூக வலைதளங்கள்ல பலரும் சொல்றதை நீங்க பார்க்கலையா?

மா.கம்யூ., கட்சியின், தமிழக செயலர் சண்முகம் பேச்சு:

மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோஷலிசம், கூட்டாட்சி ஆகியவை, நம் அரசியல் சாசனத்தின் மிக முக்கியமான கோட்பாடுகள். மதச்சார்பற்ற ஜனநாயக சோஷலிச குடியரசு என்பதே, அரசியல் சாசன முகப்புரையின் முதன்மையான அம்சம். ஆனால், இதையெல்லாம் தகர்த்து விட்டு தான் இந்தியா முழுதும் ஆட்சி நடக்கிறதா... மத்திய ஆட்சியாளர்கள் இப்படித்தான் நடந்து கொள்கின்றனரா என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.

நம்ம நாட்டுல மதச்சார்பின்மைக்கு எந்த பங்கமும் வந்த மாதிரி தெரியலையே... எல்லா மதத்தினரும் ஒற்றுமையா, சந்தோஷமா தானே வாழ்ந்துட்டு இருக்காங்க!

தே.மு.தி.க.,வைச் சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., சுதீஷ் பேட்டி:

என் ராஜ்யசபா நிதியை தொடர்ந்து ஐந்தாண்டுகள், வேலுார் மாவட்டத்திற்கும், ஓராண்டு மட்டும் விருத்தாசலத்திற்கும் வழங்க உள்ளேன். வேலுார் விமான நிலையத்திற்கு, கூடுதலாக 100 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு பெற்றுக் கொடுத்தால், அதை பெரிய விமான நிலையமாக்க முயற்சிப்பதாக, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு என்னிடம் தெரிவித்துள்ளார். இதை, முதல்வர் விஜயிடம் தெரிவிப்பேன்.

உங்க சொந்த மாவட்டம் வேலுார் என்பதால, அதுக்கே முக்கியத்துவம் தந்துட்டு, உங்க அக்கா பிரேமலதா எம்.எல்.ஏ.,வா இருக்கும் விருத்தாசலம் தொகுதிக்கு மட்டும், ஒரு வருஷ நிதின்னு ஓரவஞ்சனை பண்ணலாமா?

ஹிந்து முன்னணி தமிழக பொதுச்செயலர் செந்தில்குமார் பேட்டி:

செப்., 14ல், விநாயகர் சதுர்த்தி விழாவை ஹிந்துக்கள் எழுச்சி திருவிழாவாக, 1.50 லட்சம் இடங்களில் நடத்த உள்ளோம். விழாவில் பங்கேற்க, முதல்வர் விஜயை நிச்சயமாக அழைப்போம். ரம்ஜான், கிறிஸ்துமஸ் விழாக்களில் பங்கேற்கும் முதல்வர் விஜய், ஹிந்து பண்டி கையான விநாயகர் சதுர்த்தியில் கலந்து கொண்டு, அனைவருக்குமான முதல்வர் என நிரூபிக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்திக்கு முதல்வரிடம் இருந்து வாழ்த்து மட்டும் தான் வரும்...!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us