
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மடுகரை - கடலுார் சாலை படு மோசம்
மடுகரை - கடலுார் செல்லும் சாலை, மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பாலகுரு, மடுகரை.
மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகள்
வில்லியனுார் மூலக்கடையில் இருந்து, அண்ணாசிலை வரை இருபக்கமும் உள்ள மரக்கிளைகள், மின் கம்பிகளில் உரசுவதால், விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஜினிமுருகன், வில்லியனுார்.
பெயர் பலகை மிஸ்சிங்
வில்லியனுார் - விழுப்புரம் சாலையில், ஊர்களின் பெயர்கள் சாலையோரத்தில் இல்லாததால் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.
ரஜினிமுருகன், வில்லியனுார்.
சாலையில் மது குடிப்பவர்களால் அச்சம்
தவளக்குப்பம்-அபிஷேகப்பாக்கம் சாலையோரத்தில், மது குடிப்பவர்களால், பெண்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கணேஷ், தவளக்குப்பம்.

