நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காந்தி வீதி ஆக்கிரமிப்பு
காந்தி வீதியில், ஆக்கிரமிப்புகளால் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கலைச்செல்வன், புதுச்சேரி.
நாய்கள் தொல்லை
அரியாங்குப்பம், ஆர்.கே., நகரில், நாய்கள் தொல்லையால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
மதி, அரியாங்குப்பம்.
சிக்னல் இயக்கப்படுமா?
மரப்பாலத்தில், சிக்னல் இயங்காமல் இருப்பதால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.
சுந்தர், மரப்பாலம்.
வாய்க்காலில் கழிவுநீர் தேக்கம்
ரெட்டியார்பாளையம், அன்னை நகர், பெரிய வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
வாசன், ரெட்டியார்பாளையம்.
குண்டும், குழியுமான சாலை
அண்ணாசலை, லால்பகதுார் சாஸ்திரி வீதி குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது.
செல்வன், முதலியார்பேட்டை.