நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்னல் இயங்கவில்லை
வில்லியனுாரில் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்ட சிக்னல் விளக்கு இயங்காமல் இருப்பதால், வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது.
ரஜினி முருகன், வில்லியனுார்.
குப்பையால் கழிவுநீர் தேக்கம்
நெல்லித்தோப்பு சக்தி நகர் 8வது குறுக்கு தெருவில் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால், கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
பூங்காவனம், நெல்லித்தோப்பு.
சாலையில் பள்ளம்
நைனார்மண்டபம் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கண்ணன், மரப்பாலம்.
வாகனங்கள் நிறுத்துவதால், இடையூறு
அண்ணா சாலையில், வாகனங்களை நிறுத்தி செல்வதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
ரவி, அண்ணா சாலை.
தெரு விளக்கு எரியவில்லை
நைனார்மண்டபம் திவான்கந்தப்பா நகர், சுகாதார ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் சில இடங்களில் தெரு விளக்கு பல நாட்களாக எரியவில்லை.
ஜெய், நைனார்மண்டபம்.

