நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் திரியும் மாடுகள்
லாஸ்பேட்டை மெயின் ரோடு, பெத்தி செட்டிபேட் சாலையில், மாடுகள் அதிகமாக சுற்றித் திரிவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
சிவராஜன், லாஸ்பேட்டை.
பயணியர் நிழற்குடை தேவை
மூலக்குளம் பஸ் நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடையின்றி, பொதுமக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.
கணேசன், மூலக்குளம்.
சாலை ஆக்கிரமிப்பு
பாக்கமுடையான்பட்டு சாலையில், ஆக்கிரமிப்புகள் இருப்பதால், வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கதிரவன், புதுச்சேரி.
நாய்கள் தொல்லை
அரியாங்குப்பம் ஆர்.கே., நகரில் நாய்கள் அதிகமாக இருப்பதால், நடந்து செல்லும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ரவி, அரியாங்குப்பம்.