ADDED : செப் 04, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்து இடையூறு வில்லியனுார், கிழக்கு மாட வீதியில் வாகனங்கள் மூலம், காய்கறி மற்றும் பழங்கள் விற்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
ரஜினி முருகன், வில்லியனுார். தெரு நாய்கள் தொல்லை அண்ணா நகர், 3வது குறுக்கு தெருவில் தெரு நாய்கள் அதிகரித்து வருவதால், அப்பகுதியில் குடியிருப்பவர்கள் அச்சமடைகின்றனர்.
சாமிநாதன், அண்ணா நகர். தெரு விளக்கு எரியுமா? லாஸ்பேட்டை, ராஜாஜி நகர், முதல் மெயின் ரோட்டில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
ராஜன், லாஸ்பேட்டை. அசுத்தமான குடிநீர் அரியாங்குப்பம், ஸ்ரீராம் நகரில், குடிநீர் கலங்கலாக வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சூர்யா, அரியாங்குப்பம்.