ADDED : அக் 22, 2025 06:18 AM

குப்பை தொட்டிகள் சேதம் தவளக்குப்பம், ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே குப்பை தொட்டிகள் சேதமாகி, குப்பைகள் கீழே சிதறிக் கிடக்கிறது.
ரமணி, புதுச்சேரி. பழைய கட்டடத்தால் ஆபத்து பாரதி தெரு - ரங்கப்பிள்ளை தெரு சந்திப்பில், பழைய கட்டடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
செந்தில்குமார், புதுச்சேரி. சாலை மோசம் மூலக்குளம் - மேட்டுப்பாளையம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராஜ்குமார், மேட்டுப்பாளையம். குவிந்து கிடக்கும் குப்பைகள் பிள்ளைச்சாவடி, திருக்குளம் தெருவில், குப்பை வண்டி சரியாக வராமல் இருப்பதால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
சாதனா, பிள்ளைச்சாவடி. குண்டும் குழியுமான சாலை காமராஜர் நகர் தொகுதி, ஆரோக்கிய மாதா கார்டன் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
வெண்ணிலா, புதுச்சேரி. ஜிப்மருக்கு இரவில் பஸ் தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து, ஜிப்மருக்கு இரவு நேரங்களில், டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ராணி, புதுச்சேரி .