ADDED : ஜூலை 17, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் குவிந்த குப்பைகள்
ராஜ்பவன், குபேர் பாடசாலை வீதியில், குப்பை வண்டி சரியாக வராததால், குப்பைகள் சாலையில் குவிந்து கிடக்கிறது.
கல்யாணம், ராஜ்பவன்.
சுகாதார சீர்கேடு
வேல்ராம்பட்டு ஆதிமூலம் நகரில் காலிமனையில் குப்பைகளை போடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
கமலா, வேல்ராம்பட்டு.
தெரு நாய்கள் தொல்லை
லாஸ்பேட்டை ராஜாஜி நகரில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ராஜன், லாஸ்பேட்டை.
போக்குவரத்து இடையூறு
குயவர்பாளையம் வேல்முருகன் நகர், அம்மன் கோவில் செல்லும் வழியில், கனரக வானங்களை நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
இளங்கோ, குயவர்பாளையம்.

