ADDED : ஆக 14, 2025 01:15 AM
கழிவுநீர் தேக்கம் வில்லியனுார் பைபாசில், மங்கலம் நகரில் வாய்க்கால் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
தேவகி, வில்லியனுார். போக்குவரத்திற்கு இடையூறு வில்லியனுார், கிழக்கு மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
ரஜினிமுருகன், வில்லியனுார். சாலை மோசம் மணவெளி சாலை, குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சரவணன், அரியாங்குப்பம். தெரு நாய்கள் தொல்லை மரப்பாலம் வசந்த் நகரில், தெரு நாய்கள் அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கதிரேசன், மரப்பாலம். நிழற்குடை தேவை மரப்பாலத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சுந்தர், மரப்பாலம். கழிவுநீர் தேங்கி தொற்று அபாயம் கரிக்காலம்பாக்கம் கோட்டைமேடு அருகே சாலையில் மழைநீருடன், கழிவுநீர் தேங்கி நிற்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
சரண்யா, கரிக்கலாம்பாக்கம்.