நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டிற்குள் செல்லும் கழிவுநீர் வில்லியனுார் அடுத்த கணுவாப்பேட்டை புதுநகர் 2வது குறுக்கு தெருவில், வாய்க்காலில் உள்ள சிமென்ட் சிலாப் உடைந்து கழிவுநீர் வீட்டிற்குள் செல்கிறது.
தமிழ், கணுவாப்பேட்டை. குடிநீர் வராமல் மக்கள் அவதி பூமியான்பேட்டை, புதுத் தெருவில், குடிநீர் சரியாக வராமல் இருப்பதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொன்னம்பலம், பூமியான்பேட்டை. கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி மணவெளி, நேதாஜி நகரில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.
மூர்த்தி, அரியாங்குப்பம். இரவில் டவுன் பஸ் தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவு நேரங்களில் டவுன் பஸ் இல்லாமல் பொது மக்கள், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராணி, கோரிமேடு.