நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை வசதியின்றி மக்கள் அவதி
கோர்காடு வெங்கட்டா நகரில், சாலை வசதியில்லாமல், சேறும், சகதியுமான மண் சாலையில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெங்கடேசன், கோர்காடு.
மின் விளக்கு எரியவில்லை
அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலையில் இரவில், மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. அலெக்ஸ், புதுச்சேரி.
காலி இடங்களில் மழைநீர்
காமராஜர் நகர் தொகுதி, சங்கரதாஸ் சுவாமிகள் நகர், 2வது குறுக்கு தெருவில் காலி இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஜார்ஜ், புதுச்சேரி.
நாய்கள் தொல்லை
லெனின் வீதியில், தெரு நாய்கள் சுற்றி திரிவதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. கதிரவன், லெனின் வீதி.
மீன் கடைகளால் நெரிசல்
உப்பளம் சாலையில் மீன் கடைகள்வைத்துள்ளதாலும், இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்துவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ராமலிங்கம், உப்பளம்.

