UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 07:37 PM
சாலை போடப்படுமா?
கருவடிக்குப்பம், சப்தகிரி கோல்டன் அவன்யூ சாலையில் சென்மண் கொட்டப்பட்டு பல மாதங்களாகியும் தார் சாலை போடவில்லை.
கண்ணன், கருவடிக்குப்பம்.
குண்டும் குழியுமான சாலை
புதுச்சேரி, காமராஜர் சாலையில் அண்ணாமலை ஓட்டல் அருகில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
பத்மா, சாரம்.
கடலுார் மெயின்ரோடு, அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
தீபா, அரியாங்குப்பம்.
சாக்கடை துார் வாரப்படுமா?
கோவிந்தசாலை திருமுடி நகரில், கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதால், சாக்கடை துார்வார வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும்.
யாஸ்மின், கோவிந்தசாலை.
லாஸ்பேட்டை இ.சி.ஆர்., கிருஷ்ணா நகர் சந்திப்பில் சாலையில் உள்ள பள்ளத்தால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
பிரியா, லாஸ்பேட்டை.
