UPDATED : அக் 05, 2026 10:30 AM
ADDED : அக் 04, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
ஆக்கிரமிப்புகளால் நெரிசல்: கடலுார் சாலை, நைனார்மண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கந்தன், புதுச்சேரி.
சாலை படுமோசம்
அரியாங்குப்பத்தில் இருந்து தவளக்குப்பம் வரையிலான சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
பாஸ்கர், புதுச்சேரி.
தெரு நாய்கள் தொல்லை
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித்திரிவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கண்ணகி, தட்டாஞ்சாவடி.
போக்குவரத்து நெரிசல்
இந்திரா மற்றும் ராஜிவ் சதுக்கத்தில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
காந்தி, புதுச்சேரி.
பயணியர் நிழற்குடை தேவை
தவளக்குப்பத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மாறன், தவளக்குப்பம்.
