ADDED : பிப் 19, 2026 05:19 AM

அ நிறம் | அளவு
மீன் கடைகளால் நெரிசல் உப்பளம் சாலையில் மீன் கடைகளால், போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பாஸ்கரன், உப்பளம். தெரு நாய்கள் தொல்லை லெனின் வீதியில், தெரு நாய்கள் தொல்லையால் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
மருதவாணன், புதுச்சேரி. பயணியர் நிழற்குடை தேவை தவளக்குப்பத்தில், பயணிகள் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராஜசேகர், தவளக்குப்பம். சாலையில் மாடுகளால் விபத்து அரும்பார்த்தபுரம் பைபாசில் மாடுகள் திரிவதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
ரஜினி, புதுச்சேரி. சாலையில் மண் குவியல் கடலுார் சாலை, அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை மண் குவியலாக கிடப்பதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சதீஷ், அரியாங்குப்பம்.
