/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
30 ஏக்கர் விவசாயத்தில் ரூ.18.30 லட்சம் லாபம் கிடைக்கிறது!
/
30 ஏக்கர் விவசாயத்தில் ரூ.18.30 லட்சம் லாபம் கிடைக்கிறது!
30 ஏக்கர் விவசாயத்தில் ரூ.18.30 லட்சம் லாபம் கிடைக்கிறது!
30 ஏக்கர் விவசாயத்தில் ரூ.18.30 லட்சம் லாபம் கிடைக்கிறது!
PUBLISHED ON : மே 26, 2024 12:00 AM

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அலிவலம் கிராமத்தை சேர்ந்த, விவசாயி சுரேஷ்குமார்: கடந்த 2009ம் ஆண்டு எங்கள் பகுதியில் பி.பி.டி., ரக நெற்பயிர்களில் மஞ்சள் வைரஸ் நோய் பாதிப்பு அதிகமாக இருந்தது. அதனால், நிறைய விவசாயிகள் மகசூல் இழப்பை சந்தித்தனர். அந்த ஆண்டு நானும் பி.பி.டி., நெல் ரகம் தான் பயிர் செய்திருந்தேன்; ஆனால், என் நெற்பயிர்களில் அந்தப் பாதிப்பு இல்லை. அந்த ஆண்டு தான் முதல் முறையாக, ஒற்றை நாற்று நடவு முறையைக் கடைப்பிடிச்சிருந்தேன். இதையே தொடர்ந்து செய்கிறேன்.
எங்கள் குடும்பத்துக்கு, 30 ஏக்கர் நிலம் இருக்கு. 20 ஏக்கரில் தென்னையும், 10 ஏக்கரில் நெல்லும் சாகுபடி செய்கிறோம். 2014ம் ஆண்டில் இருந்து முழுமையாக இயற்கை விவசாயம் செய்ய துவங்கினேன். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, 20 ஏக்கரில், 1,500 தென்னை மரங்கள் சாகுபடி செய்து இருந்தோம். கஜா புயல் பாதிப்புலயும் கீழ சாயாமல் தாக்குப்பிடித்து நின்ற, 750 மரங்களில் இருந்து தொடர்ச்சியாக மகசூல் கிடைச்சுக்கிட்டு இருக்கு. ஒரு மரத்தில் இருந்து, ஆண்டுக்கு 150 காய்கள் வீதம், 750 மரங்களில் இருந்து மொத்தம், 1 லட்சத்து, 12,500 காய்கள் கிடைக்குது.
ஒரு காய்க்கு சராசரியாக, 12 ரூபாய் விலை கிடைக்கிறது. 1 லட்சத்து, 12,500 காய்கள் விற்பனை வாயிலாக, 13.50 லட்சம் வருமானம் கிடைக்குது. காய்கள் அறுவடை செய்ய, ஒரு காய்க்கு, 70 பைசா வீதம் பறிப்புக்கூலி கொடுக்குறேன். பறிக்க, 80,000 ரூபாய் செலவாகுது.இயற்கை இடுபொருட்கள் மற்றும் இதர செலவுகளுக்கு, 1 ஏக்கருக்கு, 15,000 ரூபாய் வீதம், 20 ஏக்கருக்கு, 3 லட்சம் ரூபாய் செலவாகுது. ஆக, 20 ஏக்கர் தென்னை சாகுபடி வாயிலாக, எல்லாச் செலவுகளும் போக, ஒரு ஆண்டிற்கு, 9.70 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
மீதம் 10 ஏக்கரில் நெல் சாகுபடி செய்கிறேன். இயற்கை முறையில், பாரம்பரிய நெல் வகைகளையே பயிர் செய்கிறேன். ஒரு ஆண்டிற்கு இரண்டு போக நெல் சாகுபடி வாயிலாக, 8.60 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. 20 ஏக்கர் தென்னை, 10 ஏக்கர் நெல் சாகுபடி வாயிலாக மொத்தம், 18.30 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
தொடர்புக்கு: 96002 29731.