/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
--எங்கள் மூவரையும் பிரபுதேவா அருமையாக பார்த்துக்கிறார்!
/
--எங்கள் மூவரையும் பிரபுதேவா அருமையாக பார்த்துக்கிறார்!
--எங்கள் மூவரையும் பிரபுதேவா அருமையாக பார்த்துக்கிறார்!
--எங்கள் மூவரையும் பிரபுதேவா அருமையாக பார்த்துக்கிறார்!
PUBLISHED ON : மே 24, 2025 12:00 AM

கடந்த 28 ஆண்டுகளுக்கு முன், சினிமாவின் முன்னணி நடன கலைஞர்களில் ஒருவரும், நடிகர் பிரபுதேவாவின் முன்னாள் மனைவியுமான ரம்லத் என்ற லதா: எனக்கு 8 வயதாகும் போதே ரேடியோவில் பாட்டு கேட்டு, அதற்கேற்றபடி என் அண்ணாவுடன் நடனம் ஆடுவேன். நான் முறைப்படி நடனம் கற்றுக் கொள்ளவில்லை; எதேச்சையாக தான் சினிமாவிற்குள் நுழைந்தேன்.
கிட்டத்தட்ட, 10 ஆண்டுகள் சினிமாவில், 'ஆக்டிவ்'வாக இருந்தேன். பிரபுதேவாவை காதலித்து, திருமணத்திற்கு பின் கணவர், குழந்தைகள் என்று இருந்து விட்டேன்.
கருத்து வேறுபாடு காரணமாக, நானும், பிரபுதேவாவும் ஒருகட்டத்தில் திருமண உறவிலிருந்து விலகினோம். அதன்பின் தான், யார் யார் எப்படி என்று புரிய ஆரம்பித்தது.
'சிங்கிள் பேரன்ட்' என்ற ஸ்டேட்டசை ஏற்றுக் கொள்வதில் முதலில் சங்கடமாக தான் இருந்தது. எனக்கு விதிக்கப்பட்டது அதுதான் என ஏற்றுக் கொண்டேன்.
ஆனால், அது மோசமான அனுபவமாக மாறாமல் பார்த்துக் கொண்டதில், என் பிள்ளைகளுக்கும், அவர்களின் அப்பாவிற்கும் பெரிய பங்கு உண்டு.
இந்த நிமிடம் வரை, பிரபுதேவா எங்கள் மூன்று பேரையும் அவ்வளவு அருமையாக பார்த்துக் கொள்கிறார். என்னை பற்றி ஒருநாளும், ஒருவரிடமும் ஒரு வார்த்தை கூட அவர் தவறாக பேசியதில்லை.
அதனால், அவர் மேல் எனக்கு இருந்த அன்பு இப்போதும் குறையாமல் அப்படியே இருக்கிறது. பிள்ளைகளிடம் கூட, என்னை அவரோ, அவரை நானோ விட்டுக் கொடுத்து கொள்ள மாட்டோம்.
பிள்ளைகளும், எங்கள் பிரிவு குறித்து அநாவசிய கேள்விகள் கேட்காமல், எங்கள் நிலைமையை புரிந்து, இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு விட்டனர். கணவன் - மனைவியாக நாங்கள் பிரிந்து வாழ்ந்தாலும், பிள்ளைகள் விஷயத்தில் இருவரும் பேசித்தான் எந்த முடிவையும் எடுப்போம்.
இப்போது என் இரு மகன்களுமே எங்கு போகணும் என்றாலும், என்ன செய்ய வேண்டும் என்றாலும், என்னிடமும், அவர்கள் அப்பாவிடமும் அனுமதி கேட்டு தான் செய்வர்.
நானும் சரி, பிரபுதேவாவும் சரி... பிள்ளைகள் விருப்பங்களில் தலையிட மாட்டோம். அவர்களுக்கு என்ன பிடிக்குதோ அதை செய்யட்டும் என்று நினைப்போம்.
மீண்டும் சினிமா பக்கம் வரும் ஐடியா இல்லை. எனக்கு சமையல் செய்வது மிகவும் பிடிக்கும். வீட்டுக்கு வர்றவங்களுக்கு விதவிதமா சமைத்து கொடுத்து, சாப்பிட வைத்து பார்க்க பிடிக்கும்.
அதனால் ஒரு, 'யு டியூப் சேனல்' ஆரம்பிக்கலாம் என்ற ஆசை இருக்கிறது. 'ரம்முஸ் கிச்சன்' என்று பெயர் கூட வைத்தாகி விட்டது. சீக்கிரமே துவங்குவேன்.
'இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்' என்று உலகமே பிரபுதேவாவை கொண்டாடுகிறது. ஆனால், அவர் என்னவர் என்பதை தாண்டி எனக்கு எதுவும் பெரிதாக தோன்றவில்லை!