/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கொஞ்சம் முதலீடும் நிறைய உழைப்பும் இருந்தால் வெற்றி!
/
கொஞ்சம் முதலீடும் நிறைய உழைப்பும் இருந்தால் வெற்றி!
கொஞ்சம் முதலீடும் நிறைய உழைப்பும் இருந்தால் வெற்றி!
கொஞ்சம் முதலீடும் நிறைய உழைப்பும் இருந்தால் வெற்றி!
PUBLISHED ON : மே 26, 2024 12:00 AM

சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிப்பு தொழிலில், ஆண்டிற்கு, 65 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்யும் மதுரையை சேர்ந்த சுபாஷினி தர்மேந்திரா:
அறிவியலில் முதுகலை படிப்பு, திருமணம், ஆசிரியர் பணி, குழந்தைகள் பிறந்த பின் குடும்பத் தலைவி என, என் வாழ்க்கை இருந்தது.
ஜெனரல் மேனேஜராக இருந்த கணவர், 2011-ல் உணவு தொடர்பான தொழிலுக்கு மாறினார். அவருக்கு உதவியாக இருந்த என்னிடம், தனியார் பள்ளி ஒன்று, குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு ஆர்டரை கொடுத்தனர்.
அப்போது தான், நான் சிறுதானியங்களை சென்றடைந்தேன். குக்கீஸ் செய்து ஸ்கூலுக்கு 'டெலிவரி' செய்தேன். அதன்பின் தான், 2022-ல், 'மில்லட்ஸ் அண்ட் மினிட்ஸ்' என்ற சிறுதானிய ஸ்நாக்ஸ் பிராண்டை துவங்க முடிவு செய்தேன்.
சிறுதானியத்தில் இருக்குற சத்தும், சுவையும் மிகவும் தனித்துவமானது. அதில் என் சொந்த ரெசிப்பிகளை தயாரித்தேன்.
ஒவ்வொரு ரெசிப்பியையும் பல முறை செய்து பார்த்து, பெயிலாகி, பாஸ் மார்க் வாங்கி, பெஸ்ட் மார்க் வாங்கி, என, இரண்டு மாதங்கள் சரியான சாப்பாடு, துாக்கம் இல்லாமல் செய்து பார்த்தேன்.
அது திருப்தியாக வந்ததும், மூன்று பேரை பக்கபலமாக வைத்து, 30 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொழிலை ஆரம்பித்தேன்.
பெண் என்பதால் என் பயணத்தில் எங்கும் தேங்கவில்லை; என் வேகத்தையும் தாமதப்படுத்தவில்லை. கடினமாக உழைத்தேன்.
தொழிலுக்கு தேவையான சிறுதானிய மூலப் பொருட்களை, தேனி சென்று வாங்குவேன்; தரமாகவும், விலை சரியாகவும் கிடைக்கும். தொழில் வளர துவங்கியது.
தற்போது சிறுதானிய குக்கீஸ், சிறுதானிய சேமியா, சிறுதானிய பிரேக்பாஸ்ட், சிறுதானிய ஸ்நாக்ஸ் என, 25-க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்கிறோம்.
எங்களின் முக்கியமான தயாரிப்பு, இன்ஸ்டன்ட் ஆவாரம் பூ டீ; அதற்கு நல்ல வரவேற்பு.
இப்போது என்னிடம், 10 பேர் வேலை செய்கின்றனர். 2022-ல், 25 லட்சம் ரூபாயாக இருந்த ஆண்டு டர்ன் ஓவர், தற்போது, 65 லட்சம் ரூபாயாக வளர்ந்திருக்கிறது.
தமிழகம் தாண்டி ஆந்திரா, தெலுங்கானா என வெளிமாநிலங்களுக்கும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும், எங்கள் தயாரிப்புகளை அனுப்புகிறோம்.
நீங்கள் ஒருவரிடம் வேலை பார்த்து சம்பளம் வாங்குவதை விட, பல மடங்கு பணத்தை, நீங்களே முதலாளியாகும் பிசினசில் எடுக்கலாம்.
அதை ரிஸ்க் என நினைத்து ஒதுங்கிய தலைமுறையில் இருந்து முன்னால் வாங்க.
கொஞ்சம் முதலீடும், நிறைய உழைப்பும் இருந்தால், வெற்றி உங்களுக்காக, 'வெயிட்டிங்!'
தொடர்புக்கு:
99949 49473
www.milletnminutes.com