/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
என்னோட உயிரெல்லாம் கடலில் இருக்கு!
/
என்னோட உயிரெல்லாம் கடலில் இருக்கு!
PUBLISHED ON : ஏப் 06, 2024 12:00 AM

'ஸ்கூபா டைவிங்'கில் அசத்தும், திண்டுக்கல்லைச் சேர்ந்த உமா ராணி:
பிறந்து, வளர்ந்தது சென்னையில் தான். பி.ஏ., ஆங்கிலம் முடிச்சிட்டு தனியார் பள்ளியில் வேலை பார்த்தேன். என் கணவருக்கு மாலத்தீவில் அரசு மருத்துவராக பணியாற்ற வாய்ப்பு வந்ததால், 2004-ல் அங்கு போயிட்டோம்.
மகன் கல்லுாரிக்கு போன பின், நிறைய நேரம் கிடைத்தது. ஏதாவது உருப்படியாக செய்யலாம் என்று தோன்றியது. சிறு வயதிலேயே ஓவியம் வரைவேன். அதை மறுபடியும் துவங்கினேன்.
நான் வரைவதை பார்த்துட்டு பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் டைரக்டர் மியூரியல், 'ஏதாவது ஒரு தீமில், 30 ஓவியம் வரைங்க; அதை கண்காட்சியாக வைக்கலாம்' என்றார்.
கடந்த 2010-ல் பூமி தினத்துக்கு ஒரு டாக்குமென்டரி பிலிம் ஷோ நடத்தினாங்க. அங்கு தான் பவளப்பாறைகளை பற்றி தெரிந்து கொண்டேன்.
அப்போது, பவளப்பாறைகள் தான் என் தீம்னு முடிவெடுத்தேன். பவளப்பாறைகளின் புகைப்படங்களை பார்த்து, நண்பர்கள்கிட்ட கேட்டு, 'சிடி'யில் உள்ள படங்களை பார்த்து தான் வரைவேன்.
இரண்டு ஆண்டு கழித்து அதே பூமி தினத்தில் முதல் ஓவியக் கண்காட்சி நடத்தினேன்.
கண்காட்சியைப் பார்க்க வந்த ஒருவர், 'நேரில் பார்க்காமலேயே வரையறீங்களே... உங்களால கடலுக்கு அடியில் சென்று இதெல்லாம் நேரடியாக பார்க்க முடியுமா?' என, கேட்டார்.
உடனே, 15 நாளில் நீச்சல் கத்துக்கிட்டு 'ஸ்கூபா டைவிங்' கத்துக்க போனேன். முறையாக கற்று, 49-வது வயதில் ஸ்கூபா டைவிங் செய்வதற்கான சான்றிதழ் வாங்கினேன்.
அதன் பின் தான், பவளப்பாறைகளை நேரடியாக பார்க்கத் துவங்கினேன். பவளப்பாறை எனில், அதில் மீன் இருக்கணும். மீன்களோட வீடு தான் பவளப்பாறைகள் என புரிந்தது.
அப்போது தான், பவளப்பாறைகள் பற்றி டாக்குமென்டரி எடுக்கலாம்னு ஆசை வந்துச்சு.
அப்படி தான் ஸ்கூபா டைவிங் அனுபவங்களுடன், பவளப்பாறைகள் அழிவின் விளிம்பில் இருப்பதை மையமாக வைத்து, 'கோரல் வுமன்' டாக்குமென்டரி படம் எடுத்தேன்.
அதன்பின், கடல் மாசுபடுவதையும் ஓவியங்களில் வெளிப்படுத்தினேன். சோனி பி.பி.சி., நிறுவனத்தின் வாயிலாக பிப்ரவரி மாதத்திற்கான, 'எர்த் சாம்பியன்' என, கவுரவிக்கப்பட்டேன்.
மாலத்தீவு தவிர, இலங்கை திரிகோணமலை, ராமேஸ்வரம், ராமநாதபுரம், துாத்துக்குடி, கோவா, கர்நாடகா, புதுச்சேரியில் டைவிங் போயிருக்கேன்.
இந்த ஆண்டு குஜராத் மாநிலம், துவாரகாவில் டைவிங் பண்ணலாம்னு இருக்கேன். இன்னும், 47 நாடுகளில் டைவிங் செய்து பவளப்பாறைகளை பார்க்க ஆசை. என்னோட உயிரெல்லாம் கடலில் தான் இருக்கு.

